Published : 13 Jun 2018 11:53 AM
Last Updated : 13 Jun 2018 11:53 AM

அவசரப்பட்ட பிரதமர் மோடி; தடுத்து நிறுத்திய சுஷ்மா ஸ்வராஜ்

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்கள் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட பிரதமர் மோடி சார்பில் அவசரம் காட்டப்பட்ட நிலையில்,  வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடைசி நேரத்தில் தலையிட்டு தடுத்து நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.

இங்கிலாந்து - இந்தியா இடையே பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ லண்டன் சென்றபோது ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தங்களின் படி செயல்திட்டங்கள் இறுதி செய்யப்பட்டு இறுதி ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியும், இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயும் கையெழுத்திட வேண்டும்.

கடந்த ஏப்ரல் மாதம் இருதலைவர்களும் சந்தித்து பேசிய போது ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன. ஆனால் அதில் வெளியுறவுத்துறை சார்ந்த சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான ஒப்பந்தம் மட்டும் கையெழுத்தாகவில்லை.

ஏனெனில் இந்த ஒப்பந்தத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்  எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். ஆனால் பிரதமர் அலுவலகம் வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்டு ஒப்பந்தத்தை இறுதி செய்யுமாறு கட்டாயப்படுத்தியது. ஆனால், அதில் உள்ள சில அம்சங்சங்கள் இந்தியா மற்றும் இந்தியர்களின் நலனுக்கு எதிராக அமையும் என சுஷ்மா சுட்டிக்காட்டி இருந்தார். ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டிய தருணம் நெருங்கிய சூழலில் சுஷ்மாவின் விளக்கம் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பட்டது.

இந்தியாவைச் சேர்ந்த பலர் இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குடியேறி வருவதாக அந்நாடு புகார் கூறி வருகிறது. இங்கிலாந்தில் உரிய ஆவணம் இன்றி தங்கியுள்ள இந்தியர்களை இங்கிலாந்து வெளியேற்றி வருகிறது.

அவ்வாறு ஆவணம் இன்றி தங்கி இருப்பவர்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதற்காக இந்திய அரசிடம் தகவல்களை கேட்டு பெற்று நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆவணம் இன்றி சிக்குபவர்கள் தீவிரவாதியாகவே, கடத்தல் கும்பலைச் சேர்ந்தவராகவோ இருக்கலாம் என்பதால் அவர்களின் பின்னணி பற்றி இந்திய அரசிடம் இருந்து விவரங்களை கேட்டுப் பெற்று இங்கிலாந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சர்வதேச நடைமுறையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இவ்வாறு தகவல்களை சேகரிக்க 75 நாட்கள் கால அவசாசம் வழங்கப்படுகிறது. அதற்குள்ளாக இந்திய அரசு உளவு மற்றும் விசாரணை அமைப்புகளிடம் இருந்து தகவல்களை பெற்று இங்கிலாந்து அரசுக்கு அளிக்க வேண்டும்.

இந்த நடைமுறையை மாற்றி, 15 நாட்களுக்குள் இந்திய அரசு தகவல்களை தர வேண்டும் என புதிய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு தான் சுஷ்மா சுவராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் 15 நாட்களுக்குளாக இந்தியர் ஒருவரை பற்றி முழு விவரங்களையும் சேகரித்து அவரின் பின்புலம் குறித்து இங்கிலாந்து அரசுக்கு தரவதற்கான வாய்ப்பில்லை.

அவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குள் தகவல்களை தராவிட்டால், சட்டவிரோத குடியேற்ற புகாரில் சிக்கும் இந்தியர்கள் தீவிரவாதகிள், கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என முத்திரரை குத்தப்பட்டு அவர்கள் மீது இங்கிலாந்தில் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு ஏற்படும். இந்த ஒப்பந்தத்தால் இந்தியர்களுக்கும், இந்தியாவுக்கும் தர்ம சங்கடம் ஏற்படும் என்பதால் இதற்கு சுஷ்மா ஸ்வராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடைசி நேரத்தில் இதனை கவனித்து சுஷ்மா எதிர்ப்பு தெரிவித்ததால் ஏப்ரல் மாதம், பிரதமர் மோடி - தெரசா மே சந்திப்பின் போது கையெழுத்தாகவில்லை.

கடந்த மாதம் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து ஒரு குறிப்பு இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு வந்துள்ளது. அதில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட சட்டவிரோத குடியேற்ற விவகாரம் தொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் அவசரம் காட்ட முடியாது என இந்திய அரசின் சார்பில் தற்போது இங்கிலாந்து அரசுக்கு தகவல் தரப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x