Published : 13 Jun 2018 11:46 AM
Last Updated : 13 Jun 2018 11:46 AM

சவாலை ஏற்று உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திரே மோடி கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்று தனது அன்றாட காலை உடற்பயிற்சிகள் குறித்த வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான ராஜ்யவர்தன் ரத்தோர் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில் பிரதமர் மோடி இந்திய மக்களுக்காக ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார். அவருடன் இணைந்து பணியாற்ற நாமும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது அவசியம் என்று கூறி 10 முறை புல் அப்ஸ் எடுத்த வீடியோவை #HumFitTohIndiaFit என்ற ஷாஸ்டேக்குடன் வெளியிட்டார்.

மேலும்,  விராட் கோலி, நடிகர் ஹிர்திக் ரோஷன், பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஆகியோருக்கம் இதே போன்ற  உடற்தகுதியை நிரூபிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதில் அளித்து ஹிர்திக் ரோஷன், சாய்னா நேவால் ஆகியோர்  வீடியோவை வெளியிட்டனர். இதில் பிரதமர் மோடிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சவால் விடுத்திருந்தார். இந்தச் சவாலை ஏற்றுக் கொள்வதாக மொடி பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இது தொடர்பான வீடியோ ஒன்றை மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுருக்கிறார். அதில் அவரது அன்றாட காலை நேர உடற்பயிற்சிகள் தொடர்பான வீடியோ இடப்பெற்றுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் மோடி, "யோகாவை தவிர்த்து  இதுதான் எனது காலை நேர உடற்பயிற்சி தருணங்கள்.  நான் பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட வழியில் செல்கிறேன்.

இது மிகவும்  புத்துணர்ச்சியை அளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக , பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரச்சனைகளுக்கு கருத்து  தெரிவிக்காமல் உடற்பயிற்சி தொடர்பாக பிரதமர் மோடி கருத்து தெரிவிப்பது ஏன் என எதிர்கட்சிகள் கேள்விகள் கேட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x