Last Updated : 24 May, 2018 09:16 PM

 

Published : 24 May 2018 09:16 PM
Last Updated : 24 May 2018 09:16 PM

பணத்தைக் காட்டு, பாஜகவில் சேரு: கொள்கைவாதிகள் இல்லை: வெளுத்துவாங்கிய உத்தவ் தாக்ரே

பாஜகவில் கொள்கைப்பிடிப்புள்ளவர்கள் இல்லை, பணமும், அதிகாரமும் இருந்தால், பாஜகவில் யாரும் சேர்ந்து கொள்ளலாம் என்று சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் பால்கர் மக்களவை தொகுதியில் வரும் 28-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் சிவசேனா சார்பில் சீனிவாஸ் வனகா போட்டியிடுகிறார். இவரின் தந்தை வனகா பாஜகவின் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில்திட்டத்தை எதிர்த்தார் என்பதற்காக பாஜகவை கட்சியில் இருந்து ஒதுக்கியது. சமீபத்தில் வனகா இறந்ததையடுத்து, பால்கர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அங்கு வனகா மகனுக்கு பாஜக வாய்ப்புத் தர யோசித்த நிலையில், அவரின் மகன் சீனிவாஸ் வனகாவுக்கு வாய்ப்பு அளித்தார்.

சீனிவாஸ் வனகாவுக்கு ஆதராவாக மொக்கடா நகரில் இன்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது, பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.அவர் பேசியதாவது:

சிவசேனா கட்சித் தொண்டர்கள் பணத்துக்கு ஒருபோதும் விலைபோகமாட்டார்கள். அவர்கள் நேர்மையானவர்கள். ஆனால், இன்று பாஜக கட்சியில் இருப்பவர்கள் உண்மையில் கொள்கை பிடிப்போடு இருக்கவில்லை. அங்கு கொள்கைகளோடு இருந்தவர்கள் கட்சியை விட்டு சென்றுவிட்டார்கள்.

பாஜகவில் சேர வேண்டுமானால் மிகப்பெரிய சாக்கு மூட்டைகளில் பணமும், சமூகத்தில் அதிகாரமும் இருந்தால் போதும், அந்த கட்சியில் சேர்ந்து கொள்ளலாம். ஆனால் என்னிடம் உள்ள கட்சியினர் அனைவரும் என்னுடைய சொத்துக்கள். அவர்கள் ஒருபோதும் பணம் பெறமாட்டார்கள்.

துரதிருஷ்டவசமாக பால்கர் தொகுதி எம்.பி. வனகா இறந்துவிட்டார். அவரின் இடத்தை நிரப்ப அவரின் மகனுக்கு பாஜக வாய்ப்பளிக்கும் என நினைத்திருந்தேன். ஆனால், வாய்ப்பளிக்கவில்லை. ஒருவேளை வனகா மகன் சீனிவாஸ்க்கு வாய்ப்பு அளித்திருந்தால், நானே பிரச்சாரம் செய்து இருப்பேன். மறைந்த எம்.பி. வனகாவின் மகன் சீனிவாஸ் வனகாவுக்கு நாங்கள் வாய்ப்பளித்து, தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்யும்வரை ஏன் அவரை பாஜக சென்றுபார்க்கவில்லை. வனகா குடும்பத்தினர் என்னிடம் வந்து கண்ணீர் வடித்தவுடன், மறைந்த வனகாவின் மகன் சீனிவாஸ் வனகாவையே வேட்பாளராக நியமத்தோம். நாங்கள் வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x