Published : 19 May 2018 11:54 AM
Last Updated : 19 May 2018 11:54 AM

நம்பிக்கை வாக்கெடுப்பில் ‘தகிடுதத்தம்’ செய்தாவது பாஜகதான் வெற்றி பெறும்: யஷ்வந்த் சின்ஹா காட்டம்

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏதாவது தில்லு முல்லு வேலைகள் செய்து பாஜக வெற்றி பெறும் என்று நினைக்கிறேன் என்று பாஜக முன்னாள் எம்.பி யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா பதவி ஏற்றதை எதிர்த்து காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் தாக்கல் செய்த வழக்கில், உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், எடியூரப்பா சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்குத் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதையடுத்து சட்டப்பேரவை கூட்டப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, இடைக்கால சபாநாயகராக போபையா நியமிக்கப்பட்டார். எம்எல்ஏக்கள் இன்று காலை முதல் பதவி ஏற்று வருகின்றனர்.

இந்நிலையில், பாஜகவில் இருந்து சமீபத்தில் விலகியவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா ட்விட்டரில் கர்நாடகத் தேர்தல் குறித்து விமர்சித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

‘‘கர்நாடகச் சட்டப்பேரவையில் இன்று நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எந்தவிதமான தகிடுதத்தம் வேலைகளையும், சட்டவிரோதமான வேலைகளையும் செய்து பாஜக வெற்றி பெற்றுவிடும் என்று நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்க்கலாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எடியூரப்பாவை முதல்வராகப் பதவி ஏற்க ஆளுநர் வாஜுபாய் வாலா அழைத்தவுடன் கடும் எதிர்த்துப் தெரிவித்த யஷ்வந்த் சின்ஹா டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் செய்தார். அதன்பின் போலீஸார் அவரை அப்புறப்படுத்தினார்கள்.

அதன்பின் ட்வீட் செய் யஷ்வந்த் சின்ஹா, இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மட்டும்தான் பார்த்திருக்கும், இனி இந்தியன் பொலிட்டிக்கல் லீக் நடக்கப்போகிறது. எம்எல்ஏக்கள் எம்.பி.க்கள்ஏலம் நடக்கப் போகிறது.யார் அதிகமான பணம் தருவார்களோ அவர்களுக்கே எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கப்போகிறார்கள்.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பின் நாட்டில் என்ன நடக்கப்போகிறதோ அதற்கான முன்னோட்டம்தான் கர்நாடாவில் நடக்கிறது. 2019 தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை எனத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x