Published : 19 May 2018 07:23 AM
Last Updated : 19 May 2018 07:23 AM

காங்கிரஸ் எம்எல்ஏ கடத்தல்: சித்தராமையா குற்றச்சாட்டு

காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங்கை பாஜகவினர் கடத்தி சிறை வைத்துள்ளனர் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பெங்களூருவில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜக தேசிய தலைவருக்கு அரசமைப்பு சட்டம் தெரியாது. காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றிய மாநிலங்களில் பின்வாசல் வழியாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் ஹிட்லரின் வழித்தோன்றல்கள். அவர்கள் ஜனநாயகத்தை கொலை செய்கின்றனர். பிரதமர் மோடி, அமித் ஷாவின் உத்தரவுபடியே ஆளுநர் வஜுபாய் வாலா செயல்படுகிறார்.

காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங்கை பாஜகவினர் கடத்தி சிறை வைத்துள்ளனர். அமலாக்கத் துறை, வருமான வரித் துறையினர் மூலம் அவரை மிரட்டியுள்ளனர். சட்டப்பேரவையில் சனிக்கிழமை எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. 104 எம்எல்ஏ க்கள் மட்டுமே உள்ள பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. 2 சுயேச்சைகளும் எங்கள் கூட்டணிக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனிடையே காங்கிரஸ் எம்எல்ஏ பிரதாப் கவுடா பாட்டீல் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x