Last Updated : 17 May, 2018 09:27 PM

 

Published : 17 May 2018 09:27 PM
Last Updated : 17 May 2018 09:27 PM

அது ஐபிஎல்; இது ‘இந்தியன் பொலிட்டிகல் லீக்’ ;கர்நாடக எம்எல்ஏ ஏலம் தொடங்கும்: யஷ்வந்த் சின்ஹா கிண்டல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் போன்று, இந்தியன் பொலிட்டிக்கல் லீக் (ஐபிஎல்) கர்நாடகத்தில் அரங்கேறப்போகிறது, எம்எல்ஏக்கல் ஏலம் போகப்போகிறார்கள் என்று பாஜக முன்னாள் தலைவர் யஷ்வந்த் சின்ஹா விமர்சித்துள்ளார்.

கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள், தேர்தலுக்குபின் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரின. ஆனால், ஆளூநர், தனிப்பெரும் க ட்சியான பாஜகவுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பளித்தார். எடியூரப்பாவும் முதல்வராக இன்று பதவிஏற்றார்.

இதனால் அதிருப்தி அடைந்த பாஜக முன்னாள் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்ற கோஷத்தோடு, பாஜகவின் செயல்பாடுகளைக் கண்டித்தும், ஆளுநரைக் கண்டித்தும்டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைமுன் இன்று ஆர்பாட்டம் நடத்தினார். அதன்பின் போலீஸார் அவரை அப்புறப்படுத்தினார்கள். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கர்நாடகத்தில் ஆளுநர் வாஜுபாய் வாலா தனிப்பெரும் கட்சியாகஇருக்கும் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தது அரசியலமைப்புச்சட்டத்துக்கு விரோதமானது. ஜனநாயகத்தை கொலை செய்யும் செயலாகும். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் போன்று கர்நாடகத்தில் ‘இந்தியன் பொலிட்டிகல் லீக்’ எனும் ஐபிஎல் நடக்கபோகிறது. அதில் எம்எல்ஏக்கள் எல்லாம் ஏலம்போகப்போகிறார்கள்.

எடியூரப்பா முதல்வராவதைத் தடுக்கும் வகையில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் உச்ச நீதிமன்றத்தை நாடியதில் எனக்கு மனநிறைவு இல்லை. அதுபோன்ற செயல் நாட்டின் அரசியல் முறையை வலுவிழக்கச்செய்யும். இதுபோன்ற வழக்குகளில் நீதிவழங்குவதில் தோல்வி நீதிமன்றம் தோல்வி அடைந்துள்ளது எனத் தெரிவித்தார்.

முன்னதாக யஷ்வந்த் சின்ஹா ட்விட்டரில் டிவீட் செய்ததில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பின் என்ன நடக்கபோகிறதோ அதற்கான ஒத்திகைதான் தற்போது கர்நாடகத்தில் நடந்து வருகிறது. பாஜகவுக்கு 8 எம்எல்ஏக்கள் பற்றாக்குறையாக இருக்கிறார்கள். இனிமேல் அந்த 8 எம்எல்ஏக்களை எங்கிருந்து பெறப்போகிறார்கள். மற்ற கட்சிகளில் இருந்து எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கினால்தான் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். அரசியல் கட்சிகளின் சேவகர்கள்போல் ஆளுநர்கள் செயல்படத் தொடங்கினால் ஒருபோதும் ஜனநாயகம் செயல்படாது எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x