Published : 17 May 2018 06:31 PM
Last Updated : 17 May 2018 06:31 PM

கர்நாடகா விளைவு: கோவா காங்கிரஸ், பிஹார் ஆர்ஜேடி ஆட்சியமைக்க உரிமை கோருகிறது

கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கு மொத்தம் 117 இடங்கள் உள்ள போது தனிபெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் வாஜுபாய் வாலா அழைத்ததையடுத்து கோவா, பிஹார் ஆகிய மாநிலங்களிலும் மாற்றங்கள் கோரப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கோவா கிளையும், பிஹாரின் ராஷ்ட்ரிய ஜனதாதளமும் இதே காரணத்தைக் காட்டி தங்களும் ஆட்சியமைக்கத் தகுதியானவர்கள்தான் என்று கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

கோவாவில் காங்கிரஸும் பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதாதளமும் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றன.

கோவாவில் 2017-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் வென்றது. இன்று கர்நாடகாவுக்கு ஒரு விதி எங்களுக்கு ஒரு விதியா என்று கோவா காங்கிரஸ் தலைவர் சந்திரகாந்த் கவ்லேக்கர் கூறியுள்ளார். அதாவது நாளை கோவா ஆளுநர் மிருதுலா சின்ஹாவிடம் தனது 16 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்துடன் கடிதம் அளிக்கப்போகிறேன் என்றார்.

அதே போல் பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதாதள எம்.எல்.ஏ. தேஜஸ்வி யாதவ், தன் ட்விட்டர் பக்கத்தில் “பிஹாரில் நாங்கள் தனிப்பெரும் கட்சி மட்டுமல்ல, பிஹாரின் தேர்தலுக்கு முந்தைய மிகப்பெரிய கூட்டணியுமாவோம். ஏன் எங்களை ஆட்சியமைக்க அழைக்கக் கூடாது? என்று கேட்டுள்ளார்.

இதற்கிடையே எடியூரப்பா நாளை அருதிப்பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளது.

கவர்னர் எடியூரப்பாவை அழைத்தது தவறு: சந்திரபாபு நாயுடு

கர்நாடகாவில் கவர்னர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தது பெரும் தவறு. எண்ணிக்கையில் பெரும்பான்மை கொண்ட காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளக் கூட்டணியைத்தான் அழைத்திருக்க வேண்டும் என்று சாடியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x