Published : 17 May 2018 05:00 PM
Last Updated : 17 May 2018 05:00 PM

எங்களிடம் 116 எம்.எல்.ஏக்கள்; ஆட்சியமைக்க ரிசார்ட் மேனேஜர்கள் கோரிக்கை வைப்பார்கள்: பிரகாஷ் ராஜ் கிண்டல்

கர்நாடக தேர்தல் முடிவை அடுத்து ஏற்பட்டுள்ள சூழ்நிலையை நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சித்து வருகிறார். எடியூரப்பா ஆட்சி அமைத்ததை, அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் என கண்டித்துள்ள அவர் பொதுமக்கள் இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகத்தில் பாஜக.வை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். துணிச்சலாக தனது கருத்துகளைக் கூறிவந்தார். பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்தார். தேர்தல் முடிவுக்குப் பின்னர் ஆளுநர் காங்கிரஸ், மஜத கூட்டணியை அழைக்காமல் பாஜகவை அழைத்து ஆட்சியமைக்கக் கேட்டுக்கொண்டது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

இதை நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக கண்டித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

''கர்நாடகாவில் அரசியல் சாசனம் மீதான தாக்குதல் தொடங்கி உள்ளது. கர்நாடகாவில் நடக்கும் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் எம்.எல்.ஏக்கள் எங்கு தாவினார்கள், எம்.எல்.ஏக்கள் எங்கு தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பன போன்ற செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளது. அரசியல் சாணக்கியத்தனங்களை கண்டுகளியுங்கள்.

அரசியல்வாதிகளின் விளையாட்டில் நமது இறுதித் தீர்ப்பு அரசியலுக்காக எப்படியெல்லாம் மாற்றப்படுகிறது, நமது நம்பிக்கையை சீர்குலைப்பவர்கள் யார் என்பன போன்றவற்றையெல்லாம் இப்போது கூட நாம் உணரவில்லை என்றால் மீண்டும் தோற்றுப்போவோம்.

கர்நாடக மக்களுக்கு ஒரு ப்ரேக்கிங் நியூஸ் ரிசார்ட் மேனேஜர்கள் ஆளுநரை சந்தித்து தங்களிடம் 116 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பதால், தங்களை ஆட்சியமைக்கக் கோரியுள்ளனர். அரசியல் விளையாட்டு ஆரம்பமாகி விட்டது. அரசியல் விளையாட்டில் அனைவரும் ரிசார்ட் அரசியலில் குதித்துவிட்டார்கள்'' என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

 

இதை படிக்க மறந்து விடாதீர்கள்....

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x