Last Updated : 16 May, 2018 08:37 AM

 

Published : 16 May 2018 08:37 AM
Last Updated : 16 May 2018 08:37 AM

கர்நாடக தேர்தலில் அனைத்து தமிழ் வேட்பாளர்களும் தோல்வி: தமிழ் அமைப்பினர் அதிர்ச்சி

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், மஜத, இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சார்பாக போட்டியிட்ட 30-க்கும் மேற்பட்ட தமிழ் வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் (1), மஜத (1), இந்திய குடியரசு கட்சி (4), சிபிஎம் (1), அதிமுக (4), ஆம் ஆத்மி(2) உள்ளிட்ட கட்சிகள் சார்பாகவும், சுயேச்சையாகவும் 30-க்கும் மேற்பட்ட தமிழர்கள் களமிறங்கினர். காங்கிரஸ் சார்பில் மேயர் சம்பத் ராஜ் சி.வி.ராமன் நகரிலும், மஜத சார்பில் கோலார் தங்கவயலில் மு. பக்தவசலம், இந்திய குடியரசு கட்சியின் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் தோல்வி கண்டனர். இதுதவிர அதிமுக சார்பில் போட்டியிட்ட 4 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி கட்சியின் 2 வேட்பாளர்கள், கோலார் தங்கவயலில் போட்டியிட்ட 11 தமிழ் வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x