Published : 16 May 2018 08:34 AM
Last Updated : 16 May 2018 08:34 AM

பாஜகவுக்கு தலித்துகள் ஆதரவு

இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய‌ மூன்று கட்சிகளும் மூச்சுவிடாமல் பேசிய ஒரே விஷயம் தலித்துகள். பெரும்பான்மை தலித்துகளின் வாக்கை குறிவைத்து ராகுல் காந்தி மல்லிகார்ஜுன கார்கேவையும், மோடி அம்பேத்கரையும், தேவகவுடா மாயாவதியையும் முன்னிறுத்தினர். மாயாவதியின் வருகை மஜதவுக்கு தலித் வாக்குகளை மடைமாற்றி விட்டது.

இதே போல மோடி, “கார்கே தலித் என்பதால் காங்கிரஸ் அவரை முதல்வராக்கவில்லை. நாங்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவரை குடியரசுத் தலைவராக ஆக்கி இருக்கிறோம். காங்கிரஸ் அம்பேத்கருக்கு பாரத ரத்னா கொடுக்கவில்லை. டீக்கடையில் வேலை பார்த்த நான் அம்பேத்கரால் தான் பிரதமராக ஆகி இருக்கிறேன்” என முழங்கினார். இந்த விவகாரத்தில் சித்தராமையா மீது அதிருப்தியில் இருந்த தலித்துகளின் வாக்குகள் சிதற ஆரம்பித்தன. கடந்த ஓராண்டாக வாரத்தில் ஒருநாள் தலித் வீட்டில் உண்டு, உறங்கிய எடியூரப்பாவும் வாக்குகளை பிரித்தார். எனவே கடந்த தேர்தலில் தலித் பகுதிகளில் 7 இடங்களை பிடித்த பாஜக, இப்போது 22 இடங்களை பிடித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x