Last Updated : 13 May, 2018 09:44 AM

 

Published : 13 May 2018 09:44 AM
Last Updated : 13 May 2018 09:44 AM

காங்கிரஸ், பாஜக, மஜத கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி; கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 70% வாக்குப்பதிவு: மே 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிக ளில் 2 தொகுதிகள் தவிர மற்ற 222 தொகுதிகளில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. பெங்களூருவில் உள்ள‌ ஜெயநகர் தொகுதியின் பாஜக வேட்பாளர் விஜய்குமார் அண்மையில் காலமானதாலும் ராஜராஜேஸ் வரி தொகுதியில் போலி வாக்கா ளர் அட்டைகள் சிக்கியதாலும் இந்த தொகுதிகளில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஷ்வர் கொரட்டகெரெ தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மஜத முதல்வர் வேட்பாளர் குமாரசாமி சென்னபட்னா, ராம்நகர் ஆகிய இரு தொகுதிகளிலும் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஷிகாரிபுரா தொகுதியிலும் போட் டியிடுகின்றனர்.

இந்த தேர்தல் 2019 மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுவதால் காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட கட்சிக ளின் தலைவர்கள் கடந்த இரு மாதங்களாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். கடைசிக்கட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தேசிய த‌லைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரத மர் தேவகவுடா, குமாரசாமி உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய 3 கட்சிகளும் நேருக்குநேர் மோதுவதால் மாநிலம் முழுவதும் 1.4 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.

இதில் 5.69 கோடி வாக்காளர்கள் வாக்க‌ளிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் 58,302 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டன. மகளிர் வாக்களிப்பதற்காக‌ 600 பிங்க் (மகளிர்) வாக்குச்சாவடிகள் முழுவதும் பிங்க் நிறத்தில் அமைக்கப்பட்டு இருந்தன. 12 ஆயிரம் வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்ட தால் பல‌த்த பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.

வாக்காளர்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் ஒரு சில இடங்க ளில் மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். முதல்வர் சித்தராமையா மைசூருவிலும் எடியூரப்பா ஷிகாரிபுராவிலும் குமார சாமி விஜயநகரிலும் காலையிலே வாக்களித்தனர். இதேபோல முன் னாள் பிரதமர் தேவகவுடா ஹொலெ நர்சிபுராவிலும் மத்திய அமைச்சர் சதானந்தகவுடா புட்டூரிலும் வாக்களித்தனர். இதே போல திரைப்பட நடிகர்கள், கிரிக் கெட் விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் வரிசையில் நின்று வாக்களித்த னர்.

காலை வாக்குப்பதிவு தொடங் கிய போதே 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகின. ஒரு சில இடங்களில் பதிவாகும் வாக்கு கள் தவறான சின்னத்துக்கு சென்றதால், அங்கு இயந்திரங்கள் மாற்றப்பட்டன. இதையடுத்து புதியதாக வாக்கு பதிவு நடைபெற்ற‌து. ஹெப்பால் தொகுதியில் ஒரு வாக்குசாவடியிலும் ஹொலெநர்சிப்பூர் தொகுதியில் ஒரு வாக்குசாவடியிலும் இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட்டதால் நாளை (14-ம் தேதி) வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 70 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் வாக்களித்த பின் னர் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டது.

கட்சியினரிடையே மோதல்

தேர்தலையொட்டி, கர்நாடகா முழுவதும் பரபரப்பான சூழல் காணப்பட்டது. பெங்களூரு, பெல்லாரி, கோலார், பாதாமி ஆகிய இடங்களில் காங்கிரஸ் பாஜகவினரிடையே மோதல் ஏற்பட்டது. ஹொலெநர்சிப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மஞ்சே கவுடாவை மஜத நிர்வாகி மஞ்சுநாத் தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சிவாஜி நகர், கோலார், பெல்லாரி, பாதாமி, சாமூண்டீஸ்வரி உள்ளிட்ட இடங்களில் வாக்குசா வடி வரை பணப்பட்டுவாடா நடைபெற்றது. பல இடங்களில் மது, புடவை, உணவு பொருட்கள், பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. பணப் பட்டுவாடா காரணமாக கர்நாடகாவில் பெரும்பான்மையான ஏடிஎம் மையங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனை தடுக்க முடியாமல் போலீஸார் திணறினர். இதுவரை ரூ.166 கோடிக்கும் அதிகமாக பணம், தங்கம், மின்சாதன பொருட்கள், மது உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மின்னணு வாக்கு இயந்திரங் கள் பலத்த பாதுகாப்புடன் கட்டுப்பாட்டு அறைகளில் பாதுகாக்கப்படும். வரும் நாளை மறுநாள் (மே 15) காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, முடிவுகள் அறிவிக்கப்படும். பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை கைப்பற்றும் கட்சி ஆட்சி அமைக்கும். சித்தராமையா, எடியூரப்பா, குமாரசாமி இவர்களில் யார் அடுத்த முதல்வராக பொறுப்பேற்பார் என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்துள்ளது. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு சட்டப்பேரவை அமையும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x