Last Updated : 12 May, 2018 04:18 PM

 

Published : 12 May 2018 04:18 PM
Last Updated : 12 May 2018 04:18 PM

ஹெல்ப் லைனுக்கு வந்த புகார்: மஸ்கட்டில் மோசமாக நடத்தப்பட்ட பெண் - சுஷ்மா ஸ்வராஜ் முயற்சியால் மீட்பு

மஸ்கட்டில் மோசமாக நடத்தப்பட்ட ஒரு பெண்ணை காப்பாற்றும்படி அவரது கணவர் ஹெல்ப்லைனில் கேட்டுக்கொண்டதை அடுத்து குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்கு மஹராஷ்டிராவைச் சேர்ந்த பெண்ணுக்கு மாநில மகளிர் ஆணையம் உதவியுள்ளது.

மும்பையில் உள்ள மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜய ரத்னாகர் இது குறித்து தெரிவிக்கையில்,

‘‘மஹாராஷ்டிராவின் அம்பெர்நாத்தில் வசித்து வந்தவர் ஃபரிடா கான். இவர் வேலைநிமித்தம் ஒரு ஏஜென்ட் மூலம், வேலை வாங்கித் தருவதாக அவர் அளித்த வாக்குறுதியின் பேரில் துபாய்க்கு சென்றார். ஆனால் நாளடைவில் ஃபரிடா கானின் குடும்பத்தாருடன் அவருக்கு இருந்த தொடர்பும் துண்டிக்கப்பட்டது.

இதனால் ஃபரிடா கானுடன் எந்த தொடர்பும் கொள்ளமுடியாத நிலையில் அவரைப் பற்றிய எந்தத் தகவலையும் பெற முடியாமல் தவித்து வந்தது அவரது குடும்பம்.

இந்நிலையில், அவரது கணவர் அதுல் ஆஸிஸ் கான், மும்பையில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தின் சிறப்புப் பிரிவான ''சுஹதா ஹெல்ப் லைன்''னின் 7477722424 எண்ணிற்கு போன் செய்தார். தனது மனைவிக்கு நேர்ந்துள்ள இன்னல்குறித்து பகிர்ந்துகொண்டார்.

தனது குடும்பத்தின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காகவே, தனது மனைவியை துபாய்க்கு வேலைக்கு அனுப்பி வைத்ததாகவும் அவர் கூறினார். வேலைக்கு ஏற்பாடு செய்த ஏஜென்ட் அளித்த வாக்குறுதியின் பேரில், தனது மனைவியை துபாய்க்கு வேலைக்கு அனுப்பி வைத்ததாகவும், ஆனால் அதன்பிறகு அவரைப் பற்றிய எந்தத் தகவலையும் தான் பெறமுடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

தன் மனைவி ஏதோ இக்கட்டில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் அவரை மீட்டு மீண்டும் தங்கள் குடும்பத்துடன் சேர்த்துவைக்கும்படியும் ஃபரிடா கானின் கணவர் அதுல் ஆஸிஸ்கான் கேட்டுக்கொண்டார்.

ஃபரிடா கானின் கணவரின் புகாரின் அடிப்படையில், மகளிர் ஆணைய தலைவர் ரத்னாகர், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்ஜிடம் பேசினார். அவர் ஓமனில் உள்ள இந்தியத் தூதரகத்தை அணுகி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வேண்டிய உதவிகளை உடனடியாக செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

அதன்படி இந்தியத் தூதரகம் ஃபரிடா கான் நாடு திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்தது. ஃபரிடா கான் இம்மாதம் 1ஆம் தேதி அன்று இந்தியா திரும்பினார். அவர் திரும்பிய பிறகு, ஃபரிடா கான் தேவையான மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றார்.

மற்ற பெண்களையும் மீட்க வேண்டும்

சிகிச்சைகள் பெற்ற பின்னர் ஃபரிடா கான், மகளிர் ஆணைய தலைவர் ரத்னாகரைச் சந்தித்தார். வெளிநாடுகளில் வீட்டு வேலை என்ற பெயரில் மோசமாக நடத்தப்படுகின்றனர், மற்ற பெண்களையும் காப்பாற்றி மீட்டுவர வேண்டும் என ரத்னாகரிடம் அப்பெண் கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x