Published : 08 May 2018 01:38 PM
Last Updated : 08 May 2018 01:38 PM

‘‘மக்களவை தேர்தலில் பெரும்பான்மை கிடைத்தால் பிரதமர் ஆவேன்’’ - ராகுல் காந்தி

வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தால் பிரதமராக பதவியேற்பேன் என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது. ஆளும் கட்சியான காங்கிரஸ், எதிர்கட்சியான பாஜகவும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. அங்கு மூன்றாவது பெரிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதாதளமும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் நெருங்குவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் அங்கு உச்சகட்ட பிரச்சாரம் நடந்து வருகிறது.

இந்நிலையில் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பிறகு பிரதமராக பதவி ஏற்பீர்களா? என கேள்வி கேட்கப்ப்டடது.

அதற்கு அவர் பதிலளித்ததாவது:

‘‘வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெறும். உத்தரப் பிரதேசதத்தில் பாஜகவுக்கு 5 இடங்கள் கூட கிடைக்காது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற முடியாது. காங்கிரஸ் கட்சி தனிபெரும் கட்சியாக உருவெடுக்கும். கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் அணிக்கு பெரும்பான்மை கிடைத்தால் பிரதமர் பதவியில் அமருவேன்.

கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸை ஊழல் கட்சி என விமர்சிக்கிறார். ஆனால் எடியூரப்பாவை பக்கத்தில் வைத்துக் கொண்டு இந்த குற்றச்சாட்ட கூறுகிறார். 35,000 கோடி ரூபாய் ஊழல் செய்த ரெட்டி சகோதரர்களின் ஊழலை கர்நாடக மக்கள் இன்னமும் மறக்கவில்லை’’

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x