Published : 17 Apr 2018 08:08 AM
Last Updated : 17 Apr 2018 08:08 AM

இந்தியப் பகுதிக்குள் இந்தியாவுக்குள் 21 முறை ஊடுருவ சீனா முயற்சி- இந்திய - திபெத் படை அறிக்கை

இந்தியப் பகுதிகளுக்குள் சீன ராணுவத்தினர் 21 முறை ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டதாக இந்திய - திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) அறிக்கை அளித்துள்ளது.

இந்தியாவுக்கு சொந்தமான டோக்லாம் பகுதிக்குள் கடந்த ஆண்டு ஜூன் 16-ம் தேதி,சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்தனர். இதனை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. எனினும், பேச்சுவார்த்தைகளின் விளைவாக, இரு நாட்டு ராணுவ வீரர்களும் விலக்கிக் கொள்ளப்பட்டனர். சுமார் 73 நாட்களுக்கு பிறகு இப்பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இதனிடையே, இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குள் சீன ராணுவத்தினர் அண்மைக்காலமாக ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இந்திய - திபெத் எல்லைக் காவல் படை அறிக்கை அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் ஆகியவற்றின் எல்லைப் பகுதிகளுக்குள் கடந்த 17 நாட்களில் மட்டும் சீன ராணுவத்தினர் 21 முறை ஊடுருவ முயற்சி செய்துள்ளனர். லடாக்கின் தேஸ்பங் பகுதிக்குள் மார்ச் 28-ம் தேதி 19 கி.மீ. வரை சீன வீரர்கள் ஊடுருவி வந்துள்ளனர். அதேபோல், 29, 30 ஆகிய தேதிகளில் அருணாச்சலபிரதேசத்தின் அஸ்பிலா பகுதியிலும் 4 கி.மீ. வரை சீன ராணுவத்தினர் ஊடுருவினர். இதேபோல் தொடர்ச்சியான ஊடுருவல் முயற்சிகளில் சீன ராணுவம் ஈடுபட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், சர்ச்சைக்குரிய டோக்லாம் பகுதியில் சாலை அமைக்கும் முயற்சியிலும் சீனா ஈடுபட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x