Last Updated : 15 Apr, 2018 04:05 PM

 

Published : 15 Apr 2018 04:05 PM
Last Updated : 15 Apr 2018 04:05 PM

விமானத்தில் இருப்பது போல மாறுகிறது ரயில் கழிப்பறை - பயோ டாய்லெட்டுக்கு பைபை!

 ரயில்களில் சமீபகாலமாக அமைக்கப்பட்ட பயோ டாய்லெட்டுகள் கழிவு பொருட்கள் அடைத்து துர்நாற்றம் வீசுவதால், அதற்கு மாற்றாக  விமானங்களில் இருப்பதை போல,‘வேக்கும் டாய்லெட்டுகள்’ அமைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக 13 ரயில்களில் புதிய கழிவறைகள் அமைக்கப்பட உள்ளன.

கடந்த 2014-ம் ஆண்டு மகாத்மா காந்தி பிறந்த நாளில் ‘தூய்மை இந்தியா’ இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியது. வீடுகளில் கழிப்பறை கட்ட வேண்டும், ஒவ்வொருவரும் தங்களுடைய தனிச் சுகாதாரத்திலும் அக்கறை காட்ட வேண்டும், வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பினால், கால்களைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்; உணவு அல்லது பானங்களை அருந்தும் முன்னால் கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்' சுத்தமான நீரையே குடிக்க வேண்டும்; கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு சோப்பு போட்டு கைகழுவ வேண்டும் உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இதன் ஒருபகுதியாக, ரயில்களில் கழிவறைகளில் திறந்த வெளி கழிவறை பயன்படுத்தப்பட்டு வந்தநிலையில் அதற்கு மாற்றாக, புதிய கழிவறைகள் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ரயில்களில் தற்போது பயோ டாய்லெட் என்படும் உயிரி கழிவறை அமைக்கப்பட்டது. இதன் மூலம் ரயில்கள் பயணம் செய்யும்போது வெளியே மலம் உள்ளிட்ட கழிவுகள் வெளியேறும் நிலை தடுக்கப்பட்டது.

ஆனால் இந்த கழிவறைகளில் பாட்டீல்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை பயணிகள் போட்டால் அவை அடைத்துக் கொள்கின்றன. இதனால் ரயிலில் துர்நாற்றம் வீசி, பயணிகள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதையடுத்து ரயில்களில் பயோ கழிப்பறைக்கு பதிலாக விமானங்களில் இருப்பது போல, உறிஞ்சும் தன்மை கொண்ட கழிப்பறைகளை (vacuum toilets) ஏற்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்த ரயில்வே அதிகரிகள் கூறியதாவது:

ரயில்களில் பயோ டாய்லெட்டுகள் அடைத்துக் கொண்டு துர்நாற்றம் வீசுவதால் புதிய உறிஞ்சும் கழிப்பறைகள் அமைக்கபடுகின்றன. பயோ டாய்லெட்டை பயன்படுத்த 10 முதல் 15 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் வெற்றிட கழிப்பறைக்கு அரை லிட்டர் தண்ணீர் போதுமானது. மக்கக் கூடிய பொருட்களை கழிவறையிலேயே மக்கி விடும் என்பதால், துர்நாற்றம் வீசும் பிரச்சினை இனி இருக்காது. சதாப்தி, ராஜதானி உட்பட 13 ரயில்களில் முதல்கட்டமாக வெற்றி கழிப்பறைகள் அமைக்கப்படும், விரைவில் மற்ற ரயில்களிலும் பயோ கழிப்பறை மாற்றப்பட்டு புதிய கழிப்பறை அமைக்கப்படும்.

இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x