Published : 15 Apr 2018 02:41 PM
Last Updated : 15 Apr 2018 02:41 PM

சிகிச்சை முடிந்து எம்.பி.யாக பதவியேற்றார் அருண் ஜேட்லி

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மாநிலங்களவை எம்.பியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி (வயது 65) உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவைக்கு மீண்டும் எம்.பியாக அவர் தேர்வு செய்யப்பட்டார். சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர் பதவி ஏற்கவில்லை. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுநீரக கோளாறு இருப்பதாக கூறினர்.

இதனால் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தினர். எனினும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. அவருக்கு சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள் இருப்பதால் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். கிருமி தொற்று ஏற்படும் என்பதால் வெளியே செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் கூறியதால் அவர் அலுவலகத்திற்கு செல்லவில்லை. எனினும் வீட்டில் இருந்தபடி அவர் அலுவலக பணிகளை கவனித்து வந்தார். பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில், மாநிலங்களவை எம்.பி.யாக அவர் இன்று மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். குடியரசு துணைத்தலைவரரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடு இன்று காலை, அருண் ஜெட்லிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x