Last Updated : 11 Apr, 2018 05:54 PM

 

Published : 11 Apr 2018 05:54 PM
Last Updated : 11 Apr 2018 05:54 PM

குஜராத்தில் அமைகிறது உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா

20ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் விதத்தில் உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா குஜராத்தில் அமைக்கப்பட உள்ளதாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இன்று தெரிவித்தார்.

இதுகுறித்து அகமதாபாத்தில் அதிகாரிகள் தெரிவித்த விவரம்:

5000 மெகாவாட் திறன் கொண்ட  சூரிய மின் சக்தி பூங்கா அமைவதற்கான ஒப்புதலை குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இன்று அளித்துள்ளார். இப்பூங்காவின் கட்டுமானப் பணிகள் முழுமையடையும்போது உலகில் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்காவாக இது திகழும்.

தோலெரா சிறப்பு முதலீட்டு மண்டலத்தில் அமைக்கப்பட உள்ள இந்த பூங்கா ரூ .25,000 கோடி முதலீட்டில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. உலகின் பிரமாண்ட சூரிய மின் உற்பத்தி பூங்கா 11,000 ஹெக்டேர் நிலத்தில் அமைக்கப்பட உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, சூரிய மின் சக்தி உற்பத்தியில் மிகப்பெரிய சாதனைக்கான இலக்கை நிர்ணயித்துள்ளார். அவ்வகையில், அவரது இலக்கின்படி 2022 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் மூலமாக 175 ஜிகாவாட் மின்சாரம் தயாரிக்க இந்த திட்டம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார்..

இந்த திட்டத்தின்படி நிர்மாணிக்கப்பட உள்ள சூரிய மின் சக்தி பூங்காவில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவது மட்டுமல்ல, தோலெரா சர்வதேச நகரத்தைச் சுற்றிலும் புதிய உற்பத்திக்கான தொழிற்சாலைகளும் அமையும்.

இவ்வாறு குஜராத் அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x