Last Updated : 11 Apr, 2018 05:30 PM

 

Published : 11 Apr 2018 05:30 PM
Last Updated : 11 Apr 2018 05:30 PM

மகாராஷ்டிராவில் ‘காப்பி அடித்தது’ கண்டுபிடிக்கப்பட்டதால் மாணவர் தற்கொலை

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் அருகே, கல்லூரி தேர்வு எழுதும்போது காபியடித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு பிடிபட்ட மாணவர் நான்காவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

தேர்வு எழுதும்போது காப்பியில் ஈடுபட்டதாக தேர்வுக்கூட கண்காணிப்பாளரால் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து 19 வயது மாணவர், கல்லூரியின் நான்காவது மாடியிலிருந்து குதித்தார். பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

சச்சின் வாக், நேற்று நியூட்டிரிஷன் பயோகெமிஸ்ட்ரி பாடத் தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் போது அவர் காபியடித்ததாகவும் தேர்வுகூட கண்காணிப்பாளர் மற்றும் எம்ஐடி கல்லூரி முதல்வர் ஆகியோரிடம் இவர் பிடிபட்டார். அதைத் தொடர்ந்து பெற்றோரை அழைத்துவரும்படி கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொண்டது.

பெற்றோர்கள் தன் மீது கோபப்படக் கூடும்  என்ற அச்சம் காரணமாக வருந்திய சச்சின் வாக் தற்கொலைக்கு முயன்று கல்லூரி கட்டிடத்தின் நான்காவது மாடியிலிருலுந்து குதித்தார். ஆனால் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்த நிலையில் தனியார் மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையில், எம்ஐடி கல்லூரி இயக்குநர் முனிஷ் சர்மா, கட்டணத்தை செலுத்துவதற்காக சச்சின் வாக் மீது கல்லூரி நிர்வாகிகள் அழுத்தம் கொடுப்பதாகக் கூறுப்படுவது தவறான தகவல் எனற மறுத்தார்.

''தற்கொலையில் ஈடுபட்ட இந்த மாணவர் பல மாதங்களுக்கு முன்பே முழு கட்டணத்தையும் செலுத்தினார், எனவே பிரச்சனை இது இல்லை''என்று அவர் கூறினார்.

இவ்வாறு போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது.

கல்வியை ஒரு சுமையாகக் கருதாமல் அதில் ஆர்வத்தைத் தூண்டும் அறிவுரைகள் மாணவர்களுக்கு தேவையுள்ளது. தேர்வை எதிர்கொள்ளும் துணிச்சலை மாணவர்கள் பெற வேண்டுமென்றும், அதுமட்டுமின்றி மாணவர்கள் எதிர்காலத்தை நிர்ணயப்பதில் கல்வி மட்டுமே ஒரு அளவுகோலாகக் கருதும் நிலையிலிருந்தும் அவர்கள் வெளியே வரவேண்டும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கு தேவையான மனநல ஆலோசனைகள் பெறும்நிலையில் மாணவர்கள் துணிச்சலோடு தேர்வையும் வாழ்க்கையையும் நிச்சயம் எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x