Published : 09 Apr 2018 08:18 AM
Last Updated : 09 Apr 2018 08:18 AM

மனநலம் பாதித்த பெண் ஆதார் தகவலால் மீட்பு

மனநலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் சுற்றித் திரிந்த பெண்ணை ஆதார் தகவல் உதவியால் அவரது கணவரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீர் கேட் பகுதியில் சுற்றித்திரிந்த பெண்ணை போலீஸார் விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாக பேசிய பெண்ணை டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவர் மனநிலை சரியில்லாதவர் என்பது தெரிந்தது. அவரை மனநல காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, அந்தப் பெண்ணுக்கு ஆதார் அட்டை பதிவு செய்யவும் போலீஸாருக்கு உத்தரவிட்டது. அந்தப் பெண்ணுக்கு ஆதார் அட்டை பதிவு செய்யும் முயற்சியின்போது ஏற்கெனவே அந்தப் பெண்ணுக்கு ஆதார் அட்டை பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. அந்தப் பெண் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

உடனடியாக, ஆதார் தகவல்கள் மூலம் அந்தப் பெண்ணின் கணவரை டெல்லி போலீஸார் தொடர்பு கொண்டனர். தனது மனைவியை காணவில்லை என்று ராஜஸ்தானில் உள்ள மலகேரா காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்ததும் தெரிந்தது. டெல்லி வந்த கணவரிடம் மனநலம் பாதிக்கப்பட்ட அவரது மனைவியை போலீஸார் ஒப்படைத்தனர். இதற்கு தீவிர முயற்சி மேற்கொண்ட டெல்லி போலீஸாரை டெல்லி நீதிமன்றம் பாராட்டி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x