Published : 14 Mar 2018 02:46 PM
Last Updated : 14 Mar 2018 02:46 PM

உ.பி.யில் விநோதம்: ஆசையாக வளர்த்த கிளிக்கு இறுதிச்சடங்கு செய்த நபர்

நாம் ஆசையாக வளர்க்கும் நாய், பூனை இறந்துபோனால் வருத்தமாகத்தான் இருக்கும். அந்த செல்லப் பிராணிகளுடன் செலவிட்ட நேரத்தை நினைத்து சில நாட்கள் சாப்பிடாமல் இருந்தவர்களெல்லாம் உண்டு.

ஆனால், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒருவர் இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று, இறந்த தன்னுடைய கிளிக்கு இந்து மதத்தின்படி இறுதிச்சடங்கு செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியைச் சேர்ந்தவர் பங்கஜ் குமார் மிட்டல். 5 ஆண்டுகளுக்கு முன்பு தங்களால் மீட்கப்பட்ட கிளியொன்றை பங்கஜ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆசையாக வளர்த்து வந்தனர்.

இந்நிலையில், அந்தக் கிளி சமீபத்தில் இறந்துவிட்டது. இதையடுத்து, பங்கஜ் குமாரின் குடும்பத்தினர் ஆசையாக வளர்த்த கிளிக்கு இந்து மதத்தின்படி இறுதிச்சடங்கு செய்தனர்.

அதுமட்டுமல்ல, தகனம் செய்யப்பட்ட கிளியின் சாம்பலை கங்கைக்கு சென்று கரைத்தனர். மேலும், அக்கம்பக்கத்தினரை வீட்டுக்கு அழைத்து கிளிக்கு இரங்கல் கூட்டமும் நடத்தினார்.

இதுகுறித்து பங்கஜ் குமார் கூறும்போது, "என்னுடைய மகனைவிட அந்த கிளியை நன்றாக கவனித்தேன்" என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x