Published : 13 Mar 2018 06:49 PM
Last Updated : 13 Mar 2018 06:49 PM

தன் பாலின உறவாளர்கள் என்று 10 மாணவிகளிடம் எழுதி வாங்கிய தலைமை ஆசிரியை: ஒழுங்குபடுத்தியதாகக் கூறியதால் சர்ச்சை

 

கொல்கத்தாவில் உள்ல கமலா பெண்கள் பள்ளியின் தலைமை ஆசிரியை வகுப்பறையில் குறும்பு செய்த 10 மாணவிகளிடன் தாங்கள் தன்பாலின உறவாளர் என்று எழுதி வாங்கியதையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் ஆவேசமடைந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மார்ச் 8-ம் தேதி இந்த 10 மாணவிகளை தன் அறைக்கு அழைத்த ‘கண்டிப்பான’ தலைமை ஆசிரியை அவர்களை ‘ஒழுங்கு’ படுத்துவதற்காக இவ்வாறு எழுத்துபூர்வமாக ஒப்புதல் வாக்குமூலத்தை கட்டாயப்படுத்தி வாங்கியதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

இதனையடுத்து இந்த மாணவிகளின் பெற்றோர் தலைமை ஆசிரியை அறைக்குள் நுழைந்து அவருடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவிகளை மிரட்டி இதில் கையெழுத்து வாங்கியதாக பெற்றோர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

இது தொடர்பாக பள்ளி அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கூறியபோது, இது சாதாரணமான ஒழுங்கு படுத்தும் நடவடிக்கைதான். பெற்றோரையும் அழைத்து தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் கொஞ்சம் அதிகமாக எதிர்வினையாற்றியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

பொறுப்பு தலைமை ஆசிரியை சிகா சர்க்கார் சில மாணவிகள் இந்த 10 மாணவிகள் அத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்தனர், இதனையடுத்து மாணவிகளை அழைத்தபோது அவர்கள் ஒப்புக் கொண்டனர். இது மிகவும் உணர்வுபூர்வமான, சர்ச்சைக்குரிய விஷயன் என்பதால் எழுத்தில் ஒப்புக் கொள்ளுமாறு கூறினோம், ஆனால் பெண்களின் பெற்றொரை அழைத்து விளக்கிவிட்டோம், எழுத்துபூர்வ ஒப்புதலையும் பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டோம் என்றார்.

ஆனால் சமூக ஆர்வலர் மலோபிகா என்பவர் இதனைக் கடுமையாகக் கண்டித்துள்ளார், ‘ஒழுங்கு படுத்துவதற்காக மாணவிகளை ஏன் அவமானப்படுத்த வேண்டும்? கோ எஜுகேஷன் பள்ளிகளில் நாளை மாணவ மாணவிகள் சேர்ந்து பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் பாலியல் ரீதியாகச் செயல்பட்டதாக எழுதி வாங்குவார்களா?’ என்று கடுமையாகச் சாடினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x