Last Updated : 13 Mar, 2018 04:49 PM

 

Published : 13 Mar 2018 04:49 PM
Last Updated : 13 Mar 2018 04:49 PM

ரூ.13 ஆயிரம் எஸ்பிஐ டிராவல் கார்டு மூலம் ரூ.9 கோடி செலவு: மும்பை இளைஞர் மீது சிபிஐ வழக்குப் பதிவு

 ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டிராவல் கார்டு மூலம் ரூ.9.1 கோடி செலவு செய்த மும்பையைச் சேர்ந்த இளைஞர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள மின்னணு வர்த்தக நிறுவனங்களில் 14 லட்சம் டாலருக்கு பொருட்களை சந்தீப் குமார் ரகு பூஜாரி என்ற இளைஞர் வாங்கி மோசடி செய்துள்ளார் என்று சிபிஐ குற்றம் சாட்டுகிறது.

இது தொடர்பாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சிபிஐ தரப்பில் அளிக்கப்பட்டுள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

நவிமும்பை பகுதியில் என்ஆர்ஐ சீவுட்ஸ் பகுதில் எங்கள் ஸ்டேட் வங்கிக் கிளை உள்ளது. இங்கு வெளிநாடு செல்பவர்களுக்கான டிராவல் கார்டு வழங்கப்படுகறது. இந்த கார்டுகளை யாலமாஞ்சலி சாப்ட்வேர்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி முதல் 2017-ம்ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி வரையிலான 3 மாதங்களில், எங்கள் வங்கிக் கணக்கில் பல கோடி மோசடி நடந்துள்ளது. ஒரே டிராவல் கார்டைப் பயன்படுத்தி, வெளிநாட்டைச் சேர்ந்த 3 டிராவல் கார்டுடன் இணைத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள டிராவல் கார்டில் இணைய வர்த்தகத்தின் மூலம், ரூ.9.1 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

சந்தீப் குமார் ரகு பூஜாரி என்பவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 7-ம்தேதி வழங்கப்பட்ட 3 டிராவல் கார்டில் நெட்டெல்லர்.காம், என்ட்ரோபே, ஸ்விட்வவுச்சர், எஸ்கேஆர் ஷிர்ல்.காம் ஆகிய மின்னணு வர்த்தகங்களில் ரூ.9.1 கோடிக்கு பொருட்கள் வாங்கப்பட்டு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பரிமாற்றங்கள் அனைத்தும் இங்கிலாந்தில் இருந்து செய்யப்பட்டு, அமெரிக்க டாலரில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சந்தீப் குமார் ரகு பூஜாரி மீது ஏமாற்றுதல், சதித்திட்டம், மோசடி, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய பிரிவின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x