Last Updated : 13 Mar, 2018 04:40 PM

 

Published : 13 Mar 2018 04:40 PM
Last Updated : 13 Mar 2018 04:40 PM

ஜெயா பச்சன் குறித்து நரேஷ் அகர்வால் சர்ச்சை கருத்து: அகிலேஷ் யாதவ் கண்டனம்

திரைப்படங்களில் நடவனமாடியவர் என்று ஜெயா பச்சனைப் பற்றி முன்னாள் முன்ளாள் எம்.பி. நரேஷ் அகர்வால் கருத்துக்கு சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நரேஷ் அகர்வால் கடந்த மாநிலங்களவைத் தேர்தலில் சமாஜ்வாடிக் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் இந்த முறை அவருக்கு சீட் மறுக்கப்பட்டது. அவரது இடத்தில் மாநிலங்களவை உறுப்பபினரான ஜெயா பச்சன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இதனால் அதிருப்தியுற்ற அகர்வால் கட்சியிலிருந்து விலகினார். பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அகர்வால் சமீப காலங்களில் தனது அறிக்கைகளுக்காக சர்ச்சைகளுக்கு ஆளானவர்.

நேற்று கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் சில கருத்துக்களைப் பேசினார். அப்போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் உடன் இருந்தனர்.

''திரைப்படங்களில் நடனமாடுபவர்களுக்காக, திரைப்படங்களில் நடிப்பவர்களுக்காக எனக்கு மாநிலங்களவை சீட் மறுக்கப்பட்டுள்ளது. எனக்கு அது பொருந்தவில்லை.'' என்று அவர் கூறினார்.

இதுகுறித்து அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பதிவில்''ஜெயா பச்சனுக்கு எதிராக அவர் வெளியிட்டுள்ள இழிவான கருத்துக்களுக்காக பாஜகவையும் நரேஷ் அகர்வாலையும் வன்மையாக கண்டிக்கிறோம். இது ஒவ்வொரு இந்திய பெண்ணுக்கும் திரைத்துறைக்கும் அவமானகரமானது. பாஜக பெண்களுக்கு மதிப்பது உண்மையென்றால், உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மகளிர் ஆணையமும் இதை கவனிக்க வேண்டும்'' என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுஷ்மா ஸ்வராஜ் விமர்சனம்

மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அகர்வாலின் கருத்துகுறித்து விமர்சனம் செய்துள்ளார். அவரது கருத்து ''ஏற்றுக்கொள்ளத்தக்கல்ல'' என்று கூறியுள்ளார். பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பிட் பாத்ரா கூறுகையில் அகர்வால் கருத்து கட்சிக்கு அப்பாற்பட்டது என்று கூறியுள்ளார்.

அகர்வாலின் மாநிலங்களவை பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 அன்று முடிகிறது.

சமாஜ்வாடி கட்சி சார்பாக ஜெயா பச்சன் மீண்டும் ஒருமுறை மேல்சபைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x