Last Updated : 23 Feb, 2018 05:29 PM

 

Published : 23 Feb 2018 05:29 PM
Last Updated : 23 Feb 2018 05:29 PM

நீரவ் மோடி நிறுவன பிராண்ட் விளம்பரங்களுக்கான ஒப்பந்தங்களை முறித்துக்கொண்டார் பிரியங்கா சோப்ரா

நீரவ் மோடி நிறுவன பிராண்ட்டில் விளம்பரங்களில் தோன்றுவதற்கான ஒப்பந்தங்களிலிருந்து விலகிக்கொள்வதாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அறிவித்துள்ளதாக நடிகையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரியங்காவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ''பாலிவுட் நடிகையும் உலக அழகியாக 2000ல் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான பிரியங்கா சோப்ரா, வைர வியாபாரி நீரவ் மோடியின் நிறுவனங்களுக்காக தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து தோன்றினார்.

சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், நீரவ் மோடி நிறுவனங்களுடனான தனது ஒப்பந்தத்தை பிரியங்கா சோப்ரா முறித்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்''

இவ்வாறு ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா முன்னதாக பிடிஐயிடம் இதுகுறித்து தெரிவித்தபோது, ''நிரவ் மோடியின் பிராண்ட்டுக்கென விளம்பரங்களில் நடிக்கும் ஒப்பந்தம் முடிந்துவிட்டது. இனிமேல் அதன்அடிப்படையில் எந்த வித சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை'' என்றார்.

நடிகை பிபாஷா பாசு, கீதாஞ்சலி ஜெம்ஸ் விளம்பரத்தில் இடம்பெற்றிருந்தார். நீரவ் மோடியின் மாமா மெஹுல் சோக்ஸிக்கு சொந்தமான இந்நிறுவனம், அவரது ஒப்பந்தம் காலாவதியான பின்னரும் கூட தனது படங்களைப் பயன்படுத்திக் கொண்டது'' என்று கூறியுள்ளார். இருப்பினும், அவரது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்ட அந் நிறுவனத்தின் மீது எந்த சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில், அரசுக்கு சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), வைரவியாபாரி நீரவ் மோடி ரூபாய் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்ததைக் கண்டறிந்தது. மும்பையில் உள்ள ஒரு கிளை அலுவலகத்தில் இருந்து மோசடி செய்யப்பட்ட கடிதங்களை நீரவ் மோடி பெற்றார்.

இவ்விவகாரத்தில் அவர் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்ட நிலையில் இம்மோசடி தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x