Last Updated : 23 Feb, 2018 12:38 PM

 

Published : 23 Feb 2018 12:38 PM
Last Updated : 23 Feb 2018 12:38 PM

உலகின் மிகச் சிறிய பென்சிலை வடிவமைத்து உத்தரகாண்டைச் சேர்ந்தவர் சாதனை

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உலகிலேயே மிகச் சிறிய பென்சிலை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் சந்திர உபாத்யாய. இவர் ஒரு நுண்கலை கலைஞர்.

இந்நிலையில் இவர் 5 மிமீ நீளமும் 0.5 மிமீ அகலமும் கொண்ட சிறிய அளவிலான பென்சிலை வடிவமைத்திருக்கிறார். ஒரு சிறிய மரத்துண்டில் இருந்து இந்த பென்சிலை அவர் செதுக்கியுள்ளார். அதனுள் ஹெ.பி. லெட்டையும் நுழைத்துள்ளார்.

இந்த பென்சிலை செய்து முடிக்க அவருக்கு 3 முதல் 4 நாட்கள் வரை ஆனதாகக் கூறுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x