Published : 21 Feb 2018 12:39 PM
Last Updated : 21 Feb 2018 12:39 PM

பேஸ்புக் நிறுவனர் ஜுகர்பெர்கைக் காட்டிலும், நடிகை பிரியா வாரியருக்குதான் ‘ஃபாலோவர்ஸ்’ அதிகமாம்

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்கைக் காட்டிலும், மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியருக்குத்தான் இன்ஸ்டாகிராமில் ஃபாலோவர்ஸ் அதிகம் என்பது தெரியவந்துள்ளது

மலையாளத்தில் இயக்குநர் உமர் அப்துல் வகாப் இயக்கத்தில், நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் நடித்துள்ள திரைப்படம் ‘ஒரு அடார் லவ்’. இந்த திரைப்படத்தில் வரும் பாடலான ‘மணிக்கய மலரய பூவே’ என்ற பாடல் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி பெரும் உச்சத்தை தொட்டத்து. இன்னும் 10 நாட்களில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், இந்த திரைப்படத்தின் பாடல், பெரும் வரவேற்பைப் பெற்று, ஏறக்குறைய 4 கோடி ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் நடிகை பிரியா பிரகாஷுக்கு 6 லட்சத்து 6 ஆயிரம் ஃபாலோவர்ஸ் ஒரே நாளில் இணைந்து, ஏறக்குறைய ஒரு வாரத்துக்குள் பிரியாவை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 45 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஆனால், 45 லட்சம் ஃபாலோவர்ஸ் என்ற எண்ணிக்கை இன்ஸ்டாகிராமை தொடங்கிய பேஸ்புக் நிறுவனர் ஜுஹர்பெர்க்குக்குகூட இல்லை என்பதுதான் வியப்பாகும்.

இப்போது ஜுஹர்பெர்குக்கு 40 லட்சம் ஃபாலோவர்ஸ் மட்டுமே இருக்கும் நிலையில், இன்ஸ்டாகிராம் தளத்துக்கு வந்த ஒருவாரத்தில் பிரியா பிரகாஷுக்கு ஃபாலோவர்ஸ் அவரைக் காட்டிலும் அதிகரித்துள்ளது.

ஒரு அடர் லவ் திரைப்படத்தில் வரும் அந்த ‘மணிக்கய மலரய பூவே’ பாடல் மொழி, நாடுகளைக் கடந்து மக்களை ஈர்த்துள்ளது. எகிப்து, அரபு, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் மொழி புரியாவிட்டாலும் கூட பிரியா பிரகாஷ் கண் சிமிட்டல், முக பாவனைகளை ரசித்து அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்துள்ளனர். மேலும், இந்த பாடலை மட்டும், ஏறக்குறைய 4 கோடி பேர் பார்த்துள்ளனர்.

சமீபத்தில் அனுஷ்கா ஷெட்டி நடித்த தெலுங்கு திரைப்படம் பாகமதி நல்ல வசூலைக் குவித்ததையடுத்து, இன்ஸ்டாகிராமில் அவரைப் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 20 லட்சமாக உயர்ந்தது, அவரைக் காட்டிலும் அதிகமாக பிரியா பிரகாஷ்க்கு ஃபாலோவர்ஸ் அதிகரித்துவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x