Last Updated : 14 Feb, 2018 06:04 PM

 

Published : 14 Feb 2018 06:04 PM
Last Updated : 14 Feb 2018 06:04 PM

காதலர் தினம்: ரசிகர்களுக்கு அமிர்கான், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பாலிவுட் கலைஞர்கள் ட்விட்டரில் வாழ்த்து

காதலர் தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் ஆமிர்கான். கரண் ஜோஹர், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பாலிவுட் கலைஞர்கள் தங்கள் ரசிகர்களுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டரில் பாலிவுட் கலைஞர்கள் தெரிவித்த வாழ்த்துக்கள் விவரம்:

அமிர் கான்: ஹாய் கய்ஸ், காதலர் தினத்தன்று என்னுடைய 'பெஹ்லா நாஷா' பாடலைக் கேளுங்கள்! காதலர் தினத்துக்கு உகந்த பாடல் இது. இன்னொன்றையும் நான் சொல்லவேண்டும், இப்பாடல் எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று. அனைவருக்கும் மகிழ்ச்சியான காதலர் தின வாழ்த்துக்கள்!

கரன் ஜோஹர்: உலகில் காதல் மிகவும் அழகானது! ஈகோ இல்லாத போது.... அது நிபந்தனையற்ற பணிகளைச் செய்கிறது. இது எதிர்ப்பார்ப்புகளை சார்ந்திருக்காதபோது, நம்பிக்கையில் இதன் அஸ்திவாரம் நிறுவப்படும்போது மிகவும் முக்கியமானது.

சன்னி தியோல்: ஹேப்பி வாலென்டைன்ஸ் டே!

ரவீனா டாண்டன்: அனைத்து என் வாலென்டைஸ்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.. பெரிய மார்க்கெட்டிங் தந்திரம்தான், ஆனால் அதனுடன் கொஞ்சம் காதலும் உண்டு. யாரையும் கொல்ல வேண்டாம்! நிகழும் வாழ்க்கையை காதலியுங்கள் ஒவ்வொரு நாளும்!

ஷில்பா ஷெட்டி: என் வாலெண்டைன்ஸ்க்கு ஹேப்பி வாலெண்டைன்ஸ் வாழ்த்துக்கள். எனக்குப் பிடித்த இடத்தில் ஒன்றாக இருக்கவே விருப்பம்... என்வீட்டில் உன்னோடு நான் இருக்கிறேன்.

திவ்யா தத்தா: காதலர் தின வாழ்த்துக்கள்.

அர்ஷத் வார்சி: எல்லோருக்கும் மிகவும் மகிழ்ச்சியான காதலர் தினம் ... நாம் பேச வேண்டும் ஒரே மொழியை நாம் பேசவேண்டும், காதல் மொழி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x