Last Updated : 14 Feb, 2018 05:41 PM

 

Published : 14 Feb 2018 05:41 PM
Last Updated : 14 Feb 2018 05:41 PM

சீனா, பாகிஸ்தான் இளம் பெண்களின் காதல் வலை: பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு காதலர் தின எச்சரிக்கை

சீனா, பாகிஸ்தான் நாடுகள் இளம்பெண்கள் மூலமாக முக்கிய ஆவணங்கள் பெற காதல் வலை விரிப்பதாகத் தெரிய வந்துள்ளது. மத்திய உளவுத்துறையில் கிடைத்த தகவலால் மத்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் காதலர் தின எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வாரம் இந்திய விமானப்படையின் அதிகாரியான கேப்டன் அருண் மார்வா (51) கைது செய்யப்பட்டார். இவர் மீது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பிற்கு டெல்லியில் இருந்து உளவு பார்த்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இவரை தம் தொடர்பில் கொண்டுவர பாகிஸ்தான் தன் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மூலமாக அருணுக்கு காதல் வலை விரிந்திருந்தனர்.

இதுபோல், காதல் வலை விரித்து தம் நாட்டிற்கு சாதகமாக உளவு பார்க்க இந்திய அதிகாரிகள் சிக்க வைக்கப்படுகின்றனர். இதற்காக, சீனா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அதிகம் முயன்று வருகின்றனர். இந்தத் தகவலை தனது உளவின் மூலம் உறுதிசெய்து மத்திய உளவுத்துறையினர் தம் உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளித்துள்ளது. குறிப்பாக இதில், பிப்ரவரி 1 இன்று காதலர் தினத்தன்று இதற்காக அதிகமாக முயற்சிக்கப்படும் எனவும் அது எச்சரித்துள்ளது.

இதை ஏற்ற மத்திய உள்துறை அமைச்சகம் தனது அனைத்து பாதுகாப்பு படைகளின் அதிகாரிகளையும் எச்சரித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து 'தி இந்து'விடம் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, இதுபோல், ''காதல் வலையில் சிக்கியதாக இதுவரை இந்திய ராணுவத்தின் 13 பணியற்றும் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை சிக்க வைக்கும் இளம்பெண்கள் ஆபாசக் காதல் உரையாடல் நிகழ்த்தி தம் வலையில் சிக்க வைக்கின்றனர். இது இன்றையதினம் அதிகம் முயற்சிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன'' எனத் தெரிவித்தனர்.

காதலுக்கு தனிப்பிரிவு

இந்த காதல்வலை விரிப்பதற்காக ஆங்கிலம் மற்றும் உருது அறிந்த இளம் பெண்களை அந்த இருநாடுகளும் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இவர்கள், சமூக வலைதளங்களில் இந்திய அதிகாரிகளின் கணக்குகளை தேடிப்பிடித்து தங்களின் கவர்ச்சிப் படங்களுடன் நட்பு அழைப்பு அனுப்புகின்றனர். இதில் சிக்குபவர்களுடன் வாட்ஸ் அப் மற்றும் முகநூல்களில் 'சாட்டிங்' உரை நிகழ்த்துகின்றனர். இந்த காதல் நட்பு உறுதியானவுடன் தம் நாட்டிற்கு வேண்டிய முக்கிய ஆவணங்களை இந்திய அதிகாரிகளிடம் பெற முயலப்படுகிறது இதுபோல் சிக்குவதாக சந்தேகிக்கப்படுபவர்களை கண்காணிக்க மத்திய உளவுத்துறையில் தனியாக ஒரு பிரிவு புதிதாகத் தொடங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x