Published : 12 Feb 2018 05:29 PM
Last Updated : 12 Feb 2018 05:29 PM

ரூ.8,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி: ராஜஸ்தான் அரசின் ‘தேர்தல் பட்ஜெட்’ தாக்கல்

ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ரூ.8,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி, 650 கோடி ரூபாய் வரி குறைப்பு உட்பட, மக்களை ஈர்க்கும் திட்டங்கள் அடங்கிய பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே தாக்கல் செய்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு மக்களவை தொகுதிக்கும், ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கும் சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் ஆளும் பாஜக படுதோல்வியடைந்தது. எதிர்கட்சியான காங்கிரஸ் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அம்மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இடைத் தேர்தல் முடிவகள் பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில அரசுக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இதில் மக்களை கவர்ந்திழுக்கும் பல்வேறு திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அம்மாநில விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான விவசாய கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகள் ஒவ்வொருவருக்கும், ஒரு முறை கடன் தொகையாக 50,000 ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக 8,000 கோடி ரூபாய் அளவிற்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படடுள்ளளது.

பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என பல தரப்பினரும் பயன்பெறும் வகையில் 44,135 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உடல்நலம், மருத்துவம், உள்கட்டமைப்பு, தொழில்கள், கல்வி உள்ளிட்ட துறை சார்ந்த திட்டங்கள் பல அறிவிக்கப்பட்டுள்ளன. கிராமப்புற மக்களுக்கு மின்சாரம், சமூக கட்டமைப்பு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுககீடு செய்யப்பட்டுள்ளது.

இதை தவிர மொத்தமாக 650 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு விதமான வரி குறைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. 107,865 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 28,011 கோடி ரூபாய் அளவிற்கு பற்றாக்குறை இருக்கும் எனவும் படஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x