Last Updated : 07 Feb, 2018 03:50 PM

 

Published : 07 Feb 2018 03:50 PM
Last Updated : 07 Feb 2018 03:50 PM

காங்கிரஸ், திரிணாமூல் கட்சிகள் நாட்டுமக்களை பிளவுபடுத்துகின்றன: பூணம் மஹாஜன் எம்பி குற்றச்சாட்டு

காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகள், போலி மதச்சார்பின்மை  பிரச்சாரம் செய்து நாட்டு மக்களை பிளவுபடுத்துகின்றன என பாரதிய ஜனதா இவ மோர்ச்சா தலைவர் பூனம் மகாஜன் எம்பி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மும்பையில் பாஜகவின் இளைஞர் அமைப்புக்கான நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:

போலி மதச்சார்பின்மை மற்றும் சிறுபான்மையினரின் பிரசாரத்தை ஊக்குவிப்பதன்மூலம் அரசியல் ஆதாயங்களுக்காக நாட்டுமக்களை பிளவுபடுத்துகின்றன.

இரு கட்சிகளும் பிரிவினைவாத அரசியலை ஊக்குவிக்கும்போது, ​​பிரதம மந்திரி நரேந்திர மோடி ஒரு 'புதிய இந்தியா'க்காக பணியாற்றி வருகிறார், இதன் நோக்கம் ஒவ்வொருக்குமான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதாகும். வளர்ந்துவரும் ஒரு நாட்டுக்கு பிரிவினை அரசியல் செய்துவரும் எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய தடைகளாக உள்ளன'' என்றார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முகுல் ராய்,

''சிறுபான்மை பிரச்சாரத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அரசியல் ஒரு பிரதான எடுத்துக்காட்டு. மாநிலத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லீம் மாணவர்களுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகைகளை வழங்கப்படுவதோடு, ஹஜ் இல்லம் ஒன்றையும் நிறுவியுள்ளார். அதே நேரத்தில் பள்ளிகளில் மாணவர்கள் இந்து தெய்வங்கள் வணங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

பாஜகவின் தலைவர்களில் ஒருவரான முகுல் ராய், திரிணாமூல் காங்கிரஸில் இருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்தவர். மன்மோகன் அரசில் இந்திய ரெயில்வே அமைச்சராகவும் இருந்தவர்.

மும்பையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வபன் தாஸ்குப்தாவும் கலந்து கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x