Published : 31 Jan 2018 03:30 PM
Last Updated : 31 Jan 2018 03:30 PM

காஸ்கஞ்ச் கலவரம்: கொலை தொடர்பாக முக்கிய குற்றவாளி கைது

உத்தரப் பிரதேசத்தில் காஸ்கன்ஞ் கலவரத்தின்போது சந்தன் குப்தா என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த வந்த சலீமை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கன்ஞ் பகுதியில் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்துத்துவா அமைப்புகள் சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது. 100க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் தேசியக்கொடியுடன் அணி வகுத்துச் சென்றனர். அப்போது அவர்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டது. இதில் ராகுல் உபாத்யாய் என்ற இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதாக வதந்தி பரவியது.

இதையடுத்து இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். வாகனங்கள், கடைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. கலவரத்தை அடக்க துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கலவரத்தி்ன் போது, குண்டு பட்டு, சந்தன் குப்தா என்பவர் உயிரிழந்தார்.

கலவரத்தில் அப்பாவிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். காஸ்கன்ஞ் நகரில் மிகப்பெரிய தொழிலதிபரான வாசிம் நஸீம் வீடு சூறையாடப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கலவரம் தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சந்தன் குப்தா கொல்லப்பட்ட நிலையில் அதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சலீம் என்ற அந்த நபர் தலைமறைவாக இருந்த நிலையில் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் குறித்த விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x