Published : 15 Jan 2018 02:34 PM
Last Updated : 15 Jan 2018 02:34 PM

கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு: கேரள க்ரைம் பிராஞ்சில் அமலாபால் சரண்

கார் வாங்கிய விவகாரத்தில் நடிகை அமலாபால் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்துள்ள நிலையில் இன்று (திங்கள்கிழமை) அவர் கேரள க்ரைம் பிராஞ்சு முன் சரணடைந்தார்.

இந்த வரி ஏய்ப்பால் கேரள அரசுக்கு ரூ.20 லட்சம் நஷ்டம் எற்பட்டுள்ளதாக கேரள வரித் துறை கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று கேரள க்ரைம் பிராஞ்சு முன் அமலாபால் சரணடைந்தார். அவரிடம் க்ரைம் பிராஞ்சு ஐ.ஜி எஸ்.ஸ்ரீஜித் விசாரணை நடத்தி வருகிறார்.

அமலாபால் மீது சட்டப்பிரிவுகள் 420, 468, 471 ஆகியனவற்றில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன் ஜாமீனுடன் ஆஜரான அமலா பால்:

கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக அமலா பால் முன் ஜாமீனுடன் ஆஜரானார். வெள்ளை நிற மேல் சட்டையும், அடர் நிற ஜீன்ஸும் அணிந்து வந்தார். அமலாபால் வருவதைத் தெரிந்து கொண்டு அங்கு பத்திரிகையாளர்கள் குவிந்திருந்த நிலையில், யாரிடமும் பேசாமல் அவர் உள்ளே சென்றுவிட்டார்.

நடந்தது என்ன?

நடிகை அமலாபால் 1 கோடி ரூபாய்க்கு , மெர்சிடிஸ் ‘எஸ்’ ரக காரை வாங்கியுள்ளார். இந்தக் காரை கேரளாவில் பதிவு செய்ய 20 லட்ச ரூபாய் கட்ட வேண்டும். எனவே இந்தத் தொகையை தவிர்க்க புதுச்சேரியில் வேறு ஒரு நபரின் பெயரில் 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்தி தனது காரை அமலாபால் பதிவு செய்துள்ளார்.

இந்த வழக்கில் அமலாபால் வரி ஏய்ப்பு செய்தது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x