Published : 13 Jan 2018 12:48 PM
Last Updated : 13 Jan 2018 12:48 PM

அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை வெறும் நாடகம்: சிதம்பரம் சாடல்

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடியாது, இது, நாடகம் என சிதம்பரம் கூறியுள்ளார்.

ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதுகுறித்து மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘சென்னை உட்பட பல பகுதிகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்த விவகாரத்தில் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. சிபிஐ, அமலாக்கத்துறையினரும் ஏற்கனவே மூன்று முறை சோதனை நடத்தி விட்டன. சோதனை முழுக்க முழுக்க நாடகமே. அமலாக்கத்துறையின் இந்த நாடகத்தை ஏற்கனவே எதிர்பார்த்தேன்.

கார்த்தி சிதம்பரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது. ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் குற்றம் ஏதுமில்லை. சட்டவிரோத பண பரிவர்த்தனை விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடியாது’’ எனக்கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x