Last Updated : 12 Jan, 2018 06:04 PM

 

Published : 12 Jan 2018 06:04 PM
Last Updated : 12 Jan 2018 06:04 PM

விவேகானந்தர் பிறந்தநாள் பேரணியில் கலவரம்: மேற்கு வங்கத்தில் பாஜக திரிணமூல் தொண்டர்கள் மோதல்

மேற்கு வங்கத்தில் உள்ள திரிணமுல் காங்கிரஸ் மேற்கு வங்க பாஜக தலைமையகத்தின்மீது நடத்திய தாக்குதலும் இன்று காலை மற்றொரு இடத்திலும் கலவரம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பாஜக தலைமையகத்தின் மீது தாக்குதல்

இத்தாக்குதல் குறித்து மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது:

பிஜேபி தலைமையகத்தின்மீது நடந்த இந்தத் தாக்குதலானது சட்டம் மற்றும் ஒழுங்கு காற்றில் பறப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

"இன்று காலை 10.30 மணியளவில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பியபடியே பாஜக தலைமை அலுவலகத்தின்மீது கற்கள் எறிந்தனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

எங்களுடைய கட்சி அலுவலகம் மற்றும் வெளியில் நிறுத்தப்பட்டுள்ள கார்கள் மீது கற்கள் வீசப்பட்டன. 10 க்கும் அதிகமான பிஜேபி தொழிலாளர்கள் கடுமையான காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்,

இதுவா ஜனநாயகம்? சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை முற்றிலும் உடைந்துவிட்டது. ஜனாதிபதியின் ஆட்சி மட்டுமே சட்டத்தின் ஆட்சியை மீண்டும் கொண்டு வர முடியும்" என்று கோஷ் சாடினார்.

மிகப்பெரிய காவல் படை அந்த இடத்திற்கு விரைந்ததாகவும், அதன்பின் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகவும் போலீஸ்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இனவாதத்தை திரிணாமூல் அனுமதிக்காது

எனினும், மாநிலத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க பா.ஜ.க வன்முறைகளை பயன்படுத்துவதாக திரிணாமூல் காங்கிரஸ் அமைச்சர் ஷாஷி பன்ஜா குற்றம் சாட்டினார்.

"திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களை பா.ஜ.கவினர்தான் தாக்கினர். மாநிலத்தில் நிலவும் அமைதியை பாஜகவினர் குலைப்பதுபோல எங்கள் கட்சி ஒருபோதும் இனவாத சக்தியை மாநிலத்தில் அனுமதிக்காது." என்று அவர் சாடினார்.

விவேகானந்தர் பேரணியில் கலவரம்

இதற்கு முன்பு ஒரு மணி நேரத்திற்கு முன்னர், கொல்கத்தாவில் உள்ள ஜொரபகன் பகுதியில் உள்ள கட்சிகளின் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.

நடைபெற்ற சுவாமி விவேகானந்தாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மத்திய கொல்கத்தாவில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பேரணியைக் குறிவைத்து இந்த மோதல் நடத்தப்பட்டது.

பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா (பி.ஜே.எம்.எம்), மாநிலத்தின் தெற்குப் பகுதியான காண்டாயிலிருந்து கூச்பெஹர் நகரைநோக்கி எட்டு நாள் மோட்டார் சைக்கிளில் அணிவகுப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த மோட்டார் சைக்கிள் பேரணி வரும் ஜனவரி 18 அன்று முடிவடையும் என அறிவிக்கப்பட்டது.

பாஜக தலைவரும் கவுன்சிலருமான மினாதேவி புரோஹித் இது குறித்து தெரிவிக்கையில், திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் எங்கள் கட்சித் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கொடூரமாக தாக்கினர்."

பாரதீய ஜனதா யுவ மோர்ச்சாவினர், "ஜொரபகான் பகுதியிலிருந்து ஒரு பேரணியை நடத்த முயன்றபோது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மோசமாக வந்து தாக்கினர். இதில் பலரும் காயமடைந்துள்ளனர்" என்று தெரிவிக்கின்றனர்.

திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த உள்ளூர் எம்எல்ஏ ஸ்மிதா பக்ஷி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார் மற்றும் "வங்காளத்தில் அரசியல் ஆதாயம் தேடமுயற்சித்தவர்களே இந்த வன்முறைக்கு பின்னால் உள்ளனர்" என்றார்.

கவர்னரிடம் புகார்

திருணாமூல் காங்கிரஸ் தலைவர்கள், பாஜக தொண்டர்கள் உள்ளூர் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் அதன் தலைமைக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டியுள்ளனர்.

பாஜக பிரதிநிதி இன்று மாலை கவர்னரை சந்தித்து இன்று நடைபெற்ற சம்பங்கள் குறித்து புகார் மனு அளிக்க உள்ளதாகவும் கட்சித் தரப்பில் கூறப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x