Last Updated : 27 Nov, 2017 08:49 PM

 

Published : 27 Nov 2017 08:49 PM
Last Updated : 27 Nov 2017 08:49 PM

டெல்லியில் ‘இந்திய உடல் உறுப்பு நாள்’ கொண்டாட்டம்: தொடர்ந்து 3 ஆவது முறையாக தமிழகத்திற்கு விருது

டெல்லியில், ‘இந்திய உடல் உறுப்பு நாள்’ இன்று கொண்டாடப்பட்டது. இதில், உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சையில் இந்தியாவிலேயே தொடர்ந்து முதன்மை மாநிலமாக தமிழகம் இருப்பதாக விருது வழங்கப்பட்டது.

இன்று புது டில்லியில் 8 ஆவது "இந்திய உடல் உறுப்பு தான நாள்" அனுசரிக்கப்பட்டது. இதற்கான விழா, மத்திய மக்கள் நலவாழ்வுத்துறை இணை அமைச்சர் .அனுபிரியா பட்டேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ,உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சையில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இந்தியாவில் முதன்மை மாநிலத்திற்கான விருது தமிழகத்திற்கு அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் அனுபிரியா பட்டேல் விருதினை தமிழக அரசு சார்பில் அதன் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார்.

விருதிற்கு பின் நிகழ்ச்சியில் பேசிய தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது, ‘இதுவரை தமிழகத்தில் 1056 கொடையாளிகளிடம் இருந்து 5933 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மூலம் தமிழகம் மற்ற அனைத்து மாநிலங்களையும் விஞ்சி நிற்கிறது. தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் மூலம் இச்சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்திற்கு தமிழகத்தில் மட்டும் தான் மிக அதிகமாக ரூபாய் 35 லட்சம் வரை வழங்கப்படுகிறது.’ எனத் தெரிவித்தார்.

உடல் உறுப்பு தானங்களில் தமிழகத்தின் சிறப்பு குறித்து பிரதமர் நரேந்தர மோடி தனது ‘மன் கி பாத்’ வானொலி உரையிலும், பிரிட்டிஷ் மருத்து இதழ் தனது கட்டூரையிலும் பாராட்டியதையும் அமைச்சர் விஜயபாஸ்கர் நினவு கூர்ந்தார். இந்த நிகழ்ச்சியை, மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையின் கீழ் செயல்படும் ’தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு(NOTTO)’ நடத்தி இருந்தது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு (ம ) குடும்பநலத்துறை முதன்மை செயலாளர் திரு.ஜே.ராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x