Last Updated : 17 Nov, 2017 01:29 PM

 

Published : 17 Nov 2017 01:29 PM
Last Updated : 17 Nov 2017 01:29 PM

நோயுற்ற தாயின் உருக்கமான கடிதத்தால் காஷ்மீரில் சரணடைந்தார் லஷ்கர் தீவிரவாதி

லஷ்கர்-இ-தொய்பாவில் சமீபத்தில் இணைந்த காஷ்மீர் இளைஞர் மஜித் கான் (22), நோயுற்ற தாயின் உருக்கமான கடிதத்தால் வியாழக்கிழமை மாலை காவல்துறையில் சரணடைந்தார்.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் கூறும்போது, ''தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் மஜித் கான் துப்பாக்கியுடன் சரணடைந்தார். இந்த சம்பவம், புதன்கிழமை அன்று குல்காம் மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்த நாளில் நடந்துள்ளது.

வணிகவியல் பட்டதாரியான மஜித், தன்னுடைய நண்பனான யவர் நிஸாரின் தீவிரவாத கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அதை நோக்கி ஈர்க்கப்பட்டார். கடைசியாக ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி, யவர் நிஸாரின் இறுதிச் சடங்குக்கு மஜித் கான் தலைமை தாங்கினார்.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஏ.கே- 47 துப்பாக்கியோடு தீவிரவாதத்தில் இணைந்துவிட்டேன் என்ற மஜித்தின் அறிவிப்பு வெளியானது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இதைத் தொடர்ந்து தீவிரவாதத்தைக் கைவிடக் கோரி, மஜித்துக்கு ஏராளமான ஆன்லைன் கோரிக்கைகள் வரத்தொடங்கின. கால்பந்து வீரர் மற்றும் சமூக சேவையாளரான மஜித் கான், ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று ஏராளமான உள்ளூர்க்காரர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

குடும்பத்துக்கு ஒரே வாரிசான மஜித் கான் தீவிரவாத அமைப்பில் இணைந்த நிலையில், அவர் தாயில் உடல்நிலை மோசமடைந்தது. இதனால் நோய்வாய்ப்பட்ட மஜித்தின் தாய், மகன் மீண்டும் வீடு திரும்ப வேண்டும் என்றுகோரி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதமும் இணையத்தில் வைரலானது'' என்றனர்.

இதைத் தொடர்ந்து தற்போது மஜித் கான், மனம் மாறி காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x