Last Updated : 20 Aug, 2017 12:36 PM

 

Published : 20 Aug 2017 12:36 PM
Last Updated : 20 Aug 2017 12:36 PM

இந்தியாவுக்கான ரஷ்ய தூதராக நிக்காலே நியமனம்

இந்தியாவுக்கான புதிய ரஷ்ய தூதராக நிக்காலே குடாஷேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தற்போது மாஸ்கோவில் வெளியுறவு அமைச்சக செயலகத்தில் துணை இயக்குநராக உள்ளார். இவரை இந்தியத் தூதராக ரஷ்ய அதிபர் புதின் நியமித்துள்ளதாக டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்தது.

டெல்லியில் ரஷ்ய தூதராக பணியாற்றியவர் அலெக்ஸாண்டர் கடாகின். சரளமாக இந்தி பேசக்கூடிய கடாகின் இந்தியாவின் நண்பராக கருதப்பட்டார். 67 வயதான அவர், கடந்த ஜனவரி 26-ம் தேதி உடல்நலக்குறைவால் டெல்லி மருத்துவமனையில் காலமானார். இதையடுத்து 7 மாதங்களுக்குப் பிறகு புதிய தூதர் நியமிக்கப் பட்டுள்ளார்.

நிக்காலே குடாஷேவ் இதற்கு முன் மைக்ரோனேசியா மற்றும் மார்ஷல் தீவுகளுக்கான ரஷ்ய தூதராக கடந்த 2014-15-ம் ஆண்டு பணியாற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x