Published : 08 Aug 2017 08:07 AM
Last Updated : 08 Aug 2017 08:07 AM

நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 11 லட்சம் பான் கார்டுகள் நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் 11.44 லட்சம் போலி பான் கார்டுகளை மத்திய அரசு நீக்கியுள்ளது. ஜூலை மாதத்தில் இந்த கார்டுகள் ஒட்டு மொத்தமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளன. ஒரே சமயத்தில் மிக அதிக அளவில் பான் கார்டுகள் நீக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

மேலும் பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக வரி தாக்கல் செய்பவர்களின் எண் ணிக்கை 25 சதவீதம் உயர்ந்திருப் பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் விதிமுறைகள் படி, ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் எண்கள் வைத்திருப்பது சட்ட விரோதமாகும். அதன்படி தற்போதுள்ள பான் கார்டுகளில் போலிகளை கண்டறிந்து அவற்றை ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. முக்கியமாக, இறந்தவர்கள் பெயரில் உள்ள பான் கார்டுகள், தவறான தகவல்களை அளித்து பெறப்பட்ட பான் கார்டுகள் குறித்து நாடு முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் 11.44 லட்சம் போலி பான் கார்டுகள் கண்டறியப்பட்டு அவை ஜூலை மாதத்தில் ஒட்டுமொத்தமாக நீக்கம் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பான் எண் ஒவ்வொருவரின் தனித் தன் மையை உறுதிப்படுத்துகிறது. புது பான்கார்டு விண்ணப்பங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் பழைய பான் கார்டுகள் மற்றும் போலி பான் கார்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு நபருக்கே பல பான் கார்டுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அது போல ஒரே பான் எண் பலருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று ஏராளமான குளறுபடிகள் உள்ளன

இதனால் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது பான் கார்டில் ஆதார் விவரங்களை சேர்க்க வேண்டியது முக்கியம் என்பதை உணர வேண்டும். ஏற்கெனவே அறிவித்தபடி பான் எண் ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ம் தேதியாகும்.

பான் அட்டை செயல்பாட்டில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வதற்கு https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/KnowYourPanLinkGS.html என்ற இணைய தளத்துக்குச் சென்று விவரங்களை பதிவு செய் தால் பான் அட்டையின் தற்போதைய நிலவரம் தெரியும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி தாக்கல் 25% உயர்வு

கறுப்புப் பணத்தை ஒழிக்க கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக் கப்பட்டது. அதற்குப் பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.

இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் காரணமாக வருமான வரி தாக்கல் செய்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் 2.83 கோடி பேர் வரி தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டில் 2.27 கோடி பேர் வரி தாக்கல் செய்திருந்தனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 24.7 சதவீதம் வரை வரிதாக்கல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் வரி தாக்கல் வளர்ச்சி வீதம் 9.9 சதவீதமாக இருந்தது.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு விளக்கம் அளிக்க முடியாத வகையில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த பல கணக்குகளை வருமான வரித் துறை கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் தனிநபர்களின் வருமான வரி தாக்கல் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் வரி தாக்கல் செய்யப்பட்டுள்ள 2.79 கோடி கணக்குகளில் தனிநபர்களின் வருமான வரி தாக்கல் 25.3 சதவீதம் உயர்ந்துள்ளது. பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு புதிதாக வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது.

நேரடி வருமான வரி வசூலும் அதிகரித்துள் ளது. தனிநபர் வருமானத்தில் முன்கூட்டியே வருமான வரி வசூலின் வளர்ச்சி 2016-17 நிதியாண்டில் 41.9 சதவீதம் உயர்ந்துள்ளது.

இவ்வாறு நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x