Last Updated : 20 Jul, 2017 03:58 PM

 

Published : 20 Jul 2017 03:58 PM
Last Updated : 20 Jul 2017 03:58 PM

பசித்த வயிற்றுக்கு கொஞ்சம் கல்யாணச் சாப்பாடு

இரு இளைஞர்கள் ஏழைகளைத் தேடி கல்யாணச் சாப்பாடு பரிமாறிவருகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், திருமணத்திற்குப் பிறகு மீதமுள்ள உணவைத்தான் அவர்கள் கேட்டுப் பெற்றுவந்து கட்டுமானப் பணி நடைபெறும் இடங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பசியால் வாடுவோருக்கு வழங்குகிறார்கள்.

தினம் தினம் கேளிக்கை விருந்துகள் முடிந்தபிறகு, சாலையோர யதார்த்தம் ஜெயித்த கதை இது.

திருமணத்தைவிட்டு விருந்தினர்கள் வெளியேறியதும், விழா அமைப்பு காண்ட்ராட்காரர்கள் வழக்கமாக உணவுப்பொருட்கள் மீந்திருப்பதைப் பார்த்து அதை அப்புறப்படுத்திவிடுவார்கள். ஆனால் யுவராஜ் எம், மற்றும் சிவகுமார் பத்ராய்யா போன்ற நல்ல உள்ளங்கள், அந்த தேங்கிப்போன உணவை நகரத்தின் நலிந்த பிரிவினர் நிறைந்த பகுதிகளுக்கு எடுத்துச் சென்று அவர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறார்கள்.

மார்க்கெட்டிங் செய்யும் யுவராஜ்

மார்க்கெட்டிங் தொழிலில் ஈடுபட்டு வரும் யுவராஜ் கடந்த நான்கு ஆண்டுகளாக தனது வேலை நேரம் போக கிடைக்கும் சிறிது நேரங்களில் திருமண விழாக்களுக்குச் சென்று உபரி உணவை கட்டுமானத் தளங்களுக்கும், குடிசைப் பகுதிகளுக்கும் மற்றும் ரெயில்வே நிலையங்களுக்கும் எடுத்துச்சென்று அங்கு பசியால் வாடுவாருக்கு உணவளித்து வருகிறார். குறிப்பாக மேற்கு வங்காளம், சாமராஜ்பேட்டை மற்றும் பசவனகுடி போன்ற பகுதிகளில் அவர் கவனம் செலுத்துகிறார். காலையில் திருமணம் இருந்தால், கட்டுமான தளங்களுக்கு உணவை எடுத்துக் செல்கிறார். அதுவே ஒரு மாலை நிகழ்வு என்றால், அவர் ரயில் நிலையங்களுக்கு உணவை எடுத்துச் செல்கிறார். போக்குவரத்து செலவை தற்போது லயன்ஸ் கிளப் தந்து உதவுகிறது.

காவிபுரத்தில் கட்டுமான வேலை நடக்கும் ஒரு இடத்தில் வீட்டு வேலைகளில் உதவிசெய்யும் வேளாங்கண்ணி இந்த சேவையின் பயனாளிகளில் ஒருவர். ''இது போன்ற உணவை வாங்கிச் சாப்பிட எங்களுக்கு கட்டுபடியாகாது'' என்கிறார் அவர்.

விழாவுக்கு வரும் ஒரு விருந்தினர் ஒரு பந்தியில் அதிகபட்சம் 500 கிராம் உணவை சாப்பிடுவார். ஆனால் அவருக்கு 1,500 கி.கிராம் வரை உணவு வழங்கப்படுகிறது என்று கூறும் யுவராஜ் தான் உணவைப் பெற்றுவர 10 அழைப்புகளைப் பெறுவதாகக் கூறுகிறார். ''சில கிலோமீட்டர் தொலைவுகளிலேயே பலர் பசியால் வாடிக்கிடக்க அதை ஏன் நாம் வீணாக்க வேண்டும்'' என்று கேட்கிறார்.

வெற்றிலைப்பழக்கடை பத்ரய்யா

யுவராஜைப்போல இன்னொருவரும் இதே பெங்களூருவில் இருக்கிறார்.

ராஜாஜி நகரில் 16 வருடங்களாக வெற்றிலைப்பாக்கு மற்றும் வாழைப்பழக் கடை வைத்திருக்கும் பத்ரய்யா, தான் விழாக்களில் பெறும் உணவை ஏழைக்கு அளித்துவருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இங்கு வறுமையில் உள்ளவர்களும் திருமணங்களுக்கு உணவு வழங்கும் கைம்மாறு கருதாமல் உதவி

செய்பவர்களும் இருபிரிவாக பரவலாக பிரிந்துகிடப்பதைக் கவனித்த அவர், "பயிர்களை வளர்க்கும் விவசாயி ஒரு கைநிறையப் பெறும் தானியத்திற்காக விவசாயிகள் எவ்வளவு உழைக்கிறார்கள், எவ்வளவு போராடுகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. இந்த மக்கள் ஒரு மோகத்தோடு விழாவிருந்தை உண்பதும் அதை வெட்கமின்றி வீணடிப்பதும் முரண்பாடுமிக்க ஒன்றாகும்."

இந்த இரட்டையர்கள் தங்கள் வேலை முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை. அவர்கள் இருவரும் உணவு தயாராகும் இடங்களில் அவை வீணாக்கப்படுவதையும் தடுக்க சட்டத்தை உருவாக்கும் நம்பிக்கையில் அரசியல்வாதிகளையும் கொள்கைத் திட்டங்கள் வகுப்பவர்களையும் சந்தித்திருக்கிறார்கள்.

பெங்களூருவில் விருந்து உணவு
  • பெங்களூரில் பதிவுசெய்யப்பட்ட திருமண அரங்குகள்: 530
  • வருடாந்திர திருமணங்கள் எண்ணிக்கை: 85,000
  • பரிமாறும்முன் உணவு மதிப்பீடுகள்: 943 டன்
  • பரிமாறும்முன் உணவு செலவு: ₹ 339 கோடி
  • தகவல்: வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் படிப்பு, 2012

திருமணங்களில் உணவு விரயத்தை கட்டுப்படுத்த முடியுமா?

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு திருமண மண்டபத்திலும் கிட்டத்தட்ட ஒன்பது டன் உணவு வீணாகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன மற்றும் வீண்செலவுகளின் அளவுகளைப் பார்த்து அதைத் தள்ளிவிடும் விழா அமைப்பாளர்கள், ஆடம்பரமான திருமணங்களை ஒரு வரன்முறைக்குள் கொண்டுவர முடியுமா?

திருமணங்கள் மற்றும் பிற விழா செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டம் குறித்து நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது, ஆனால் சிறிய அளவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில், ஆடம்பர திருமணங்களுக்கு வரி விதிக்கும் நம்பிக்கையில், கர்நாடகா அரசு,

திருமணங்கள் தனிநபர் மசோதாவை அறிமுகப்படுத்தியது. சமீபத்தில், உணவு மற்றும் சிவில் விவகாரங்கள் அமைச்சர் யு.டி. காதர், ''உணவுப் பாதிப்பைக் குறைப்பதற்கும் ஏழைகளுக்கு மத்தியில் மறுபகிர்வு செய்வதற்கும் அரசாங்கம் ஒரு திட்டத்தை பரிசீலனை செய்துவருவதாக'' கூறினார்.சட்டமும் கொள்கைகளும் இன்னும் பலனளிக்கவில்லை.

சட்டங்கள் அரிதாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மக்களின் வாழ்வாதார உரிமைகள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருவதால், உணவு விரயம் குறித்த விழிப்புணர்வுக்கு முதன்மை இடம் தர வேண்டும் என ஆர்வலர்கள் நம்புகின்றனர். "சட்டங்களை உருவாக்கும் முன் மக்களிடையே விழிப்புணர்வு இருக்க வேண்டும். இல்லையெனில் சட்டங்கள் பயனற்றதாக இருக்கும்" என்கிறார் குடகு மாவட்டம், குஷால்நகரைச் சேர்ந்த என்.கே. மோகன். இவர் குடகு மாவட்ட பஞ்சாயத்து சார்பாக 2012ல் உணவு விரயக் கட்டுப்பாட்டுக்கான தீர்மானத்தை நிறைவேற்றியவர்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக உணவு விரயத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்த அவர், உணவுப்பொருட்களை வீணடிக்காத பழக்கவழக்கம் சிறுவயது முறையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் நம்புகிறார்.லயன்ஸ் கிளப்பின் கேபினட் உறுப்பினரான பி.வி.துவாரகநாத் தண்ணீர் சேமிப்புக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அதற்கு இணையாக உணவு விரயக் கட்டுப்பாடும் இருக்கவேண்டுமென விரும்பினார். திருமண மண்டபங்களிலிருந்து எடுக்கப்பட்ட உணவுப்பொருட்கள் வீணாவதைத் தடுக்க குளிர்ப்பதன சேமிப்பு காப்பகங்களை உருவாக்க அரசாங்க உதவி தேவை என்று அவர் விரும்புகிறார்.

உணவுப் பற்றாக்குறைக்கு செக்...

உணவுப் பற்றாக்குறை எனும் கொடுமையான சொல்லாடலுக்கு திருமணங்களில் உணவு விரயமாவதைத் தடுத்து நிச்சயம் செக் வைக்கமுடியும். அது ஒரு விழாவில் விருந்தினர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, 1960 களில் விருந்தினர் கட்டுப்பாட்டு சட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜி.கே. ஜெயின் பல்கலைக்கழகத்தின் தேசிய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஜி.கே.ஜெயின் ''இந்த சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்'' என்று விரும்புகிறார்.

"இது பஞ்சம் மற்றும் போர்கள் காரணமாக அறிமுகப்படுத்தப்பட்டது. உணவு பற்றாக்குறை ஏற்படும்போது, வாழ்வதா இல்லையா இரண்டில் ஒன்று என்ற நிலை ஏற்பட்டதால் அச்சமயம் உணவு விரயங்களை எப்படி கையாள்வது என்பது குறித்த கடுமையான அமலாக்கத்தை உத்தரவாதப்படுத்தவே இச்சட்டம் இயற்றப்பட்டது" என்று அவர் கூறினார்.

நம்மால் உணவை தயாரித்து ஊருக்கு வழங்கமுடியாது. விருந்துக்காக யாரோ தயார் செய்த உணவு வீணாகாமல் ஏழைகளுக்குச் சென்றுசேரட்டுமே என உதவும் யுவராஜ், பத்ரய்யாக்களின் முயற்சிகள் நம்மூரிலும் பரவுமா?

தமிழில்: பால்நிலவன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x