Last Updated : 04 Jan, 2016 10:46 AM

 

Published : 04 Jan 2016 10:46 AM
Last Updated : 04 Jan 2016 10:46 AM

மணிப்பூரில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிட இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலி

மணிப்பூர் மாநிலத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலியாயினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கிழக்கு மாநிலங்கள் மற்றும் திபெத், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

நேற்று அதிகாலை 4.35 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. இது மணிப்பூர் மாநிலத்தின் தமங்லாங் மாவட்டத்தில் பூமிக்கு அடியில் 17 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டி ருந்தது. இதன் காரணமாக தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறி யடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெட்டவெளிக்கு ஓடிவந்தனர்.

நிலநடுக்கம் காரணமாக இம்பால் நகரில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன் பல கட்டிடங் களில் விரிசல்கள் ஏற்பட்டன. குறிப்பாக இம்பால் மேற்கு மாவட்டம் ஜிரிபம் பகுதியிலிருந்து இதுவரை இடிபாடுகளில் சிக்கியிருந்த 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த தமங்லாங் நகரில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. மாநிலம் முழுவதும் காயமடைந்த நூற்றுக்கணக்கானோர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிஹார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு 60 வயது முதியவர் ஒருவர் பலியானதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அசாம், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, மேற்குவங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங் களிலும் நிலநடுக்கம் உணரப் பட்டது. இதனால் மக்கள் வீடு களை விட்டு வெளியேறி தெருக் களில் தஞ்சமடைந்தனர். ஆனால், அங்கெல்லாம் உயிர்ச்சேதமோ, பெரிய அளவிளான பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. எனினும் அசாம் மாநிலத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

பிரதமர் ஆலோசனை

அசாம் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக ஏற்கெனவே சென்றி ருந்த மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நில நடுக்கம் ஏற்பட்டபோது குவா ஹாட்டியில் தங்கியிருந்தார்.

இதுகுறித்து ராஜ்நாத் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது இங்குள்ள நிலவரங்கள் குறித்து விளக்கி கூறினேன். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களுடன் பேசு மாறு கேட்டுக்கொண்டார். நிலை மையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது” என்றார்.

மேலும் மணிப்பூர் மாநில முதல்வர் ஒக்ராம் இபோபி சிங் மற்றும் அசாம், அருணாச்சலப் பிரதேச மாநில முதல்வர்களுடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

திபெத்திலும் நில அதிர்வு

நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடான திபெத்திலும் உணரப்பட்டது. திபெத் தலைநகர் லாசா மற்றும் நையிங்சி, ஷன்னான், காம்டோ ஆகிய மாகாணங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், திபெத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

வங்கதேசத்தில் மூவர் பலி

மற்றொரு அண்டை நாடான வங்கதேசம் முழுவதும் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த பொது மக்கள் அலறியடித்துக்கொண்டு தங்கள் வீடுகளை விட்டு வெளி யேறி தெருவில் தஞ்சமடைந்தனர்.

இதன் காரணமாக தலைநகர் டாக்கா, ராஜ்ஷஹி மற்றும் லால்மோனிர்ஹட் ஆகிய பகுதி களில் மூன்று பேர் பலியாயினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x