Published : 26 Apr 2016 12:54 PM
Last Updated : 26 Apr 2016 12:54 PM

2017 முதல் அனைத்து செல்போன்களுக்கும் பேனிக் பட்டன் கட்டாயம்

இந்தியாவில் 2017-ம் ஆண்டு முதல் விற்பனையாக உள்ள மொபைல்போன்கள் அனைத்தி லும் அவசரகால அழைப்பு பொத் தான் வசதி (Panic Button) அறிமுகப் படுத்தப்படும். அதேபோல 2018-ம் ஆண்டிலிருந்து விற்பனைக்கு வர உள்ள செல்போன்கள் அனைத் திலும் செல்போன் உபயோகிப் பாளர் எந்த இடத்தில் இருக்கி றார் என்பதைக் காட்டும் ஜிபிஎஸ் வரைபட வசதியுடன் வெளியா கும். இத்தகவலை தொலைத் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு ஆபத்து காலத் தில் உதவி தேவைப்படும்போது உதவுவதற்காக இத்தகைய வசதியை ஏற்படுத்தித்தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப வசதிகள் அனைத் துமே மனிதனுக்கு மேம்பட்ட வசதிகளை அளிப்பதற்காக உரு வாக்கப்படுபவைதான். அதிலும் குறிப்பாக மகளிர்க்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் இத்தகைய வசதிகள் உருவாக்கப்பட உள்ள தாக மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இதன்படி இந்தியாவில் 2017-ம் ஆண்டில் விற்பனையாக உள்ள அனைத்து செல்போன்களிலும் அவசர கால அழைப்பு பொத்தான் வசதி கட்டாயம் இருக்கும். இவ்விதம் இல்லாத செல்போன்கள் ஒன்று கூட இங்கு விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது என் றார். அதேபோல 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து விற்பனையாகும் மொபைல்போன் கள் அனைத்தும் உள்ளடங்கிய ஜிபிஎஸ் வசதி கொண்டதாக இருக்கும்.

இதன்படி செல்போன்களில் 5 மற்றும் 9 எண் பொத்தான்கள் இத்தகைய அவசர கால உதவி அழைப்பு பொத்தான்களாக இருக் கும். மொபைல்போன் உற்பத்தி யாளர்கள் இதற்கேற்ப மொபைல் போன்களை தயாரிக்க வேண்டும். இந்த பொத்தானை உபயோகிப் பாளர் அழுத்தினால் அவருக்கு அவசர உதவி தேவைப்படுகிறது என்று அர்த்தம். அல்லது செல் போனை ஆப் செய்து ஆன் செய்யும் நடவடிக்கையை மூன்று முறை செய்தாலும் அதை அவசர கால அழைப்பாகக் கருதும் வகையில் செல்போன் உற்பத்தி யாளர்கள் தொழில்நுட்பம் கொண்ட செல்போன்களைத் தயா ரிக்க உள்ளதாக அவர் கூறினார்.

மகளிர்க்கு அவசர கால உதவி வசதியை அளிப்பதற்கேற்ற செயலியை (ஆப்ஸ்) உருவாக் குவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக ஏற்கெனவே செய்திகள் வெளி யாயின. அதற்குப் பதிலாக உடனடி யாக செயல்படக் கூடிய ஆபத்து கால உதவி பட்டனை அறிமுகம் செய்வது சிறப்பாக இருக்கும் என கருதப்பட்டது. மகளிரின் பாது காப்புக்காக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.

பெண்கள் பாதுகாப்பு குறித்து மகளிர் மற்றும் குழந்தை மேம் பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கடந்த டிசம்பரில் குறிப் பிடுகையில், அனைத்து மொபைல் போன் உற்பத்தியாளர்களும் இது தொடர்பான வசதிகளை உருவாக்கித் தர மொபைல்போன் விதி 2016-ல் திருத்தம் செய்யப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். இதன்படி புதிய விதிமுறை ஏப்ரல் 22-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x