Published : 05 Mar 2016 10:08 AM
Last Updated : 05 Mar 2016 10:08 AM

10-ம் வகுப்பு தேர்வு எழுத காத்திருக்கும் 77 வயது முதியவர்: 47-வது முயற்சியில் தேர்ச்சி பெற்றால் திருமணமாம்

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 77 வயது முதியவர், 47-வது முறையாக 10-ம் வகுப்பு தேர்வை எழுத தயாராகி வருகிறார்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வே பகுதியில் உள்ள கோஹாரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிவ்சரண் யாதவ் (77). மற்ற மாணவர்களை போலவே கடந்த 1968-ம் ஆண்டு முதல் முறையாக 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார். ஆனால், தோல்வி அடைந்தார். இந்த ஆண்டும் வரும் 10-ம் தேதி 10-ம் வகுப்பு தேர்வு எழுத ஆயத்தமாகி வருகிறார். இடைப்பட்ட 48 ஆண்டுகளில் இதுவரை 46 முறை தேர்வு எழுதிவிட்டார். இது 47-வது முயற்சி.

இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெறும் வரை திருமணம் செய்து கொள்வதில்லை என ஷிவ்சரண் சபதம் எடுத்திருப்பது தான். இதனால் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார் இந்த 77 வயது இளைஞர்.

இதுகுறித்து ஷிவ்சரண் கூறும்போது, ‘‘சில பாடங்களில் தேர்ச்சி பெற்று விடுகிறேன். சில பாடங்களில் தோல்வி அடை கிறேன். ஒவ்வொரு முறையும் இதுதான் நடக்கிறது. உதாரணத் துக்கு கணிதம், அறிவியலில் வெற்றி பெற்றால், இந்தி, ஆங்கி லத்தில் தோல்வி அடைகிறேன். ஒவ்வொரு தேர்விலும் இப்படி தான் மாற்றி மாற்றி நடக்கிறது. இந்த முறை அனைத்து பாடங் களிலும் தேர்ச்சி பெற்று விடு வேன்’’ என்கிறார் நம்பிக்கையுடன்.

கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் 1995-ம் ஆண்டு அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுவிட் டார். எனினும், கணிதத்தில் மட்டும் மதிப்பெண் கிடைக்கவில்லை. அதனால் தேர்ச்சி பெறும் வாய்ப்பு கைநழுவியது.

ஷிவ் சரண் பிறந்த 2 மாதங் களிலேயே தாய் இறந்துவிட்டார். 10 வயதில் தந்தையை இழந்து விட்டார். அதன்பின் உறவினர்கள் தயவில் வளர்ந்து வந்தார். முன்னோர்கள் வீட்டில் 30 ஆண்டு களாக வசித்து வருகிறார். கோயில் களில் கிடைக்கும் பிரசாதம் மற்றும் முதியோர் உதவித் தொகையில் வாழ்க்கை நடத்தி வருகிறார்.

இந்த வயதில் 10-ம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வரும் ஷிவ் சரணை கிராமத்தினர் சிலர் கேலி செய்கின்றனர். சிலர் புத்தகம், பேனா போன்ற பொருட்களை தந்து ஊக்கப்படுத்துகின்றனர்.

அதே சமயம் ‘‘இந்த ஆண்டு நிச்சயம் நான் திருமணம் செய்து கொள்வேன். எனக்கேற்ற மணப்பெண் கிடைப்பார்’’ என்று ஆணித்தரமாக கூறுகிறார் ஷிவ்சரண்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x