Last Updated : 19 Oct, 2015 08:50 AM

 

Published : 19 Oct 2015 08:50 AM
Last Updated : 19 Oct 2015 08:50 AM

பசுவதை செய்பவர்களை கொல்ல சொல்கிறது வேதம்: ஆர்எஸ்எஸ் பிரச்சார ஏட்டில் தகவல்

பசு வதை செய்பவர்களை கொல்ல வேண்டும் என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளதாக ஆர்எஸ்எஸ் பிரச்சார ஏடு ஒன்றின் பிரதான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆர்எஸ்எஸ் பிரச்சார ஏடான பாஞ்ச்ஜன்யாவின் சமீபத்திய பதிப்பில் வெளியாகி உள்ள கட்டுரையில் கூறியிருப்ப தாவது:

இந்து மதத்தில் பசு வதை என்பது மிகவும் பெரிய பிரச்சினை. எனவே, பசு வதை செய்பவர்களை கொல்ல வேண்டும் என்று வேதங்கள் கூறுகின்றன. தாத்ரி யில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக முகமது இக்லாக் கொல்லப்பட் டார். இதைக் கண்டித்து சில எழுத்தாளர்கள் தங்கள் விருதை திருப்பி வழங்கி வருகின்றனர். ஆனால் அவர்கள் இக்லாக் பசுவை வதைத்திருக்கிறார் என்பதை ஏன் கருத்தில் கொள்ள மறுக்கிறார்கள்?

தாத்ரியில் படுகொலை செய் யப்பட்ட இக்லாக் மீது தனிப்பட்ட முறையில் யாருக்கும் பகை உணர்வு இருந்ததாக எந்த ஊடக மும் கூறவில்லை. மேலும் அங்கு இதற்கு முன்பு இதுபோன்ற வன்முறை சம்பவம் ஏற்பட்டதே இல்லை. இதன்மூலம் அமைதிக்கு பெயர்போன இந்த ஊரில், காரணம் இல்லாமல் இந்த சம்பவம் நடைபெற்றிருக்காது என்பதை உணர முடிகிறது.

மேலும் இந்த நேரத்தில், எந்த ஒரு செயலுக்கும் அதற்கு இணை யான எதிர் செயல் இருக்கும் என்ற நியூட்டனின் விதியை நினைவூகூர வேண்டி உள்ளது.

இந்த சம்பவத்தைக் கண்டித்து தங்களது விருதுகளை திருப்பித் தரும் எழுத்தாளர்கள், இக்லாக் பசு வதை செய்ததைப் போன்ற குற்றச் செயலை ஊக்குவிக்கும் சமூகத்தின் மனநிலை குறித்து ஏன் கேள்வி எழுப்புவதில்லை.

தங்களுடைய முன்னோர் களின் கலாச்சார மற்றும் பழக்க வழக்கத்தைக் கைவிட வேண்டும் என்று மதம் மாறிய இந்துக் களுக்கு யார் சொல்லிக் கொடுத் தது? இக்லாக் உட்பட இப்போது முஸ்லிம்காளாக உள்ள அனை வரும் சில தலைமுறைகளுக்கு முன்பு இந்துக்களாக இருந்தவர் கள்தான். அதேநேரம் குற்றவாளி களை தண்டிப்பதற்கு சட்டம் இருக் கிறது. அந்த சட்டத்தை யாரும் தங்களுடைய கையில் எடுத்துக் கொண்டு செயல்பட உரிமை இல்லை. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

இதுகுறித்து இதழின் ஆசிரியர் ஹிதேஷ் சங்கர் கூறும்போது, “வன் முறையை நாங்கள் ஆதரிக்க வில்லை. இந்தக் கட்டுரையில் எழுத்தாளர் தனது தனிப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார். இது ஆசிரியர் குழுவின் கருத்தல்ல. தாத்ரி சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும்” என்றார்.

தங்களுடைய முன்னோர் களின் கலாச்சார மற்றும் பழக்க வழக்கத்தைக் கைவிட வேண்டும் என்று மதம் மாறிய இந்துக்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x