Last Updated : 27 Feb, 2016 08:51 AM

 

Published : 27 Feb 2016 08:51 AM
Last Updated : 27 Feb 2016 08:51 AM

ஹைதராபாத் மாணவர் ரோஹித் வெமுலா விவகாரம்: ஸ்மிருதி - மாயாவதி மீண்டும் மோதல்

மாநிலங்களவையில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி நேற்று பேசியதாவது:

வெமுலா தற்கொலை விவ காரம் தொடர்பாக விசாரணைக் குழுவில் தலித் உறுப்பினர் நிய மிக்கப்பட வேண்டும். ஆனால், அரசு அலகாபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோக் குமார் ரூபன்வால் தலைமையிலான ஒருநபர் நீதி ஆணையத்தை அமைத்துள்ளது.

நீதி ஆணையத்தில் தலித் உறுப்பினர் ஓர் அங்கமா இல்லையா? கடந்த 24-ம் தேதி கேட்ட கேள்விக்கு அரசு இது வரை பதிலளிக்கவில்லை.

விதிப்படி, அரசு இந்த ஆணை யத்தின் உறுப்பினர் எண்ணிக் கையை அதிகப்படுத்தலாம்.தலித் உறுப்பினரைச் சேர்க்கலாம். ஆனால், இதுவரை எதுவும் நடைபெறவில்லை.

இந்த விசாரணை ஆணையம் கேலிக்கூத்து. இவ்விவகாரத்தில் ஆர்எஸ்எஸ்ஸை சேர்ந்த குற்ற வாளியை பாதுகாக்க அரசு முயல் வது தெரிகிறது. இரு நாட்களுக்கு முன் பேசிய அமைச்சர் இரானி, ‘எனது விளக்கத்தால் மாயாவதி திருப்தியுறவில்லை எனில், என் தலையை வெட்டி தருவேன்’ என்றார். அரசின் விளக் கத்தால் நாங்கள் திருப்தியடைய வில்லை. இரானி சொன்னதைச் செய்வாரா. இவ்வாறு மாயாவதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஸ்மிருதி இரானி பதிலளிக்கும்போது, “வெமுலா வுக்கு உதவித்தொகையே அளிக் கப்படவில்லை என்ற தகவல் தவ றானது. கடைசியாக 2015 நவம்பர் 20-ம் தேதி அவருக்கு கொஞ்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. ஹைதராபாத் பல்கலைக் கழகத் தின் விசாரணைக் குழுவில் தலித் உறுப்பினர் யாரும் இல்லை என்பது அடிப்படையற்ற குற்றச் சாட்டு. வெமுலாவின் தாய் என் னிடம் பேசினார். நீதி விசாரணை கோரினார். அதன்படி அரசு நீதிக்குழுவை அமைத்துள்ளது, வெமுலாவின் தற்கொலைக்கான காரணங்களை விசாரிக்கிறது எனத் தெரிவித்தேன். நீதிபதி ரூபன்வால், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்தவர். மாயாவதி முதல்வராக இருந்த மாநிலத்தில் அது அமைந் துள்ளது. அவர் குறிப்பிடத்தக்க நீதியரசர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x