Last Updated : 16 Oct, 2014 03:40 PM

 

Published : 16 Oct 2014 03:40 PM
Last Updated : 16 Oct 2014 03:40 PM

ஹுத்ஹுத் புயல் பாதிப்பு: ஒடிஸாவில் 5,000 மரங்கள் அழிந்தன

ஹுத்ஹுத் புயல் பாதிப்பால் ஒடிஸாவின் கோராபுட் மாவட்டத்தில் விலைமதிப்பற்ற 5000-த்துக்கும் அதிகமான தேக்கு, சால் போன்ற அரிய வகை மரங்கள் அழிந்து நாசமாகின.

கடந்த 12-ஆம் தேதி ஞாயிறு அன்று ஆந்திரா மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் கரையை கடந்த போது, ஒடிஸா கடலோர மாவட்டங்களில் 60 - 70 கி. மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.

ஹுத்ஹுத் புயல் ஆந்திராவின் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜய நகரம், கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்கள் மட்டுமின்றி, ஒடிஸா மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஒடிஸாவில் ஹுத்ஹுத் புயல் பாதிப்பு குறித்து ஆரம்பக்கட்ட மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கோராப்புட் மாவட்டத்தில் மட்டும் 5000-த்தும் அதிகமான மரங்கள் அழிந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

கோராப்புட் மாவட்டத்தின் 4 வனப்பகுதிகளில் இருந்த விலைமதிப்பற்ற தேக்கு, சாலமரம், சக்குந்தா, யூக்கலிப்டஸ் போன்ற வகையிலான மரங்கள் அழிந்ததாக வனத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x