Published : 05 Feb 2016 10:21 AM
Last Updated : 05 Feb 2016 10:21 AM

வறண்டு போன சொந்த கிராமத்தின் வளர்ச்சிக்காக கோடிக்கணக்கில் செலவு செய்து தெபி நதியை ஆழப்படுத்தும் வைர வியாபாரி

ஜெராம்பாய் தெசியா.. குஜராத் மாநிலத்தின் சவுராஷ்டிரா பகுதி யில் உள்ள இங்கோரலா கிராமத் தைச் சேர்ந்தவர். அம்ரேலி மாவட் டத்தில் உள்ளது இந்த கிராமம். விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஜெராம்பாய், வயது 65. கிராமத் தில் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் பழங்கதை. இப்போது சூரத்தில் இருக்கிறார். ஜேஜே எக்ஸ் போர்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அதிபர். வைர வியாபாரி, ரியல் எஸ்டேட் அதிபர்.. கோடீஸ்வரர்.

சொந்த கிராமத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந் துள்ளார். வறண்டு கிடந்த பூமியைப் பார்த்து வேதனை அடைந்துள்ளார். இந்தப் பகுதியில் ஓடும் தெபி ஆறுதான் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களுக்கும் நீராதார மாக இருக்கிறது. ஆனால், ஆற்றில் தண்ணீர் அவ்வளவாக இல்லை. விவசாய நிலங்கள் காய்ந்து விட் டன. பருவ மழை காலத்தில் மட்டுமே விவசாயிகள் வேளாண்மை செய் கின்றனர். கிணறுகளில் தண்ணீர் இல்லை.

தான் பிறந்து வளர்ந்த கிராமம் வறண்டு கிடப்பதைப் பார்த்த ஜெராம்பாய், தெபி ஆற்றை ஆழப் படுத்தவும், அகலப்படுத்தவும் முடிவு செய்தார். மிகப்பெரிய திட்டத்தை கடந்த 3 மாதங்களாக அமைதியாக செய்து வருகிறார். இதற்காக தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.15 கோடியை செலவிட் டுள்ளார்.

ஆற்றை அகலப்படுத்தும் பணியில் ஏராளமான தொழிலாளர் கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யும் பணியை ஜெராம்பாயின் மனைவி செய்து வருகிறார். தொடர்ந்து பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

‘‘விவசாயி மகனாக பிறந்த நான், எனது கிராமத்து மக்கள் ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுவதை பார்க்க முடிய வில்லை. நான் சிறுவனாக இருக் கும் போதே, பணக்காரன் ஆகி விட்டால் கிராமத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப் பேன். இப்போது எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது’’ என்று நவ்குஜராத் சமே பத்திரிகையில் கூறியுள்ளார் ஜெராம்பாய்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘இன்றைக்கு என்னிடம் எல்லா வசதிகளும் உள்ளன. என் சொத்துக் கள் எல்லாவற்றையும் இந்த சமு தாயத்துக்காக திருப்பி அளிக்க விரும்புகிறேன். என் கடைசி மூச்சு உள்ள வரை வேலை செய்ய நினைக் கிறேன். இதுவரை ஆற்றில் நான்கில் ஒரு பகுதி (8 கி.மீ.) ஆழப்படுத்தும் பணி முடிந்து விட்டது. அரசிடம் இருந்து எந்த உதவியும் பெறவில்லை. ஆற்றில் அணை கட்டவும் திட்டமிட்டுள்ளேன்’’ என்கிறார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தெபி ஆற்றின் ஆழம் 2 அடியாக வும், அகலம் 70 அடியாகவும் இருந்தது. இப்போது 25 அடி ஆழம், 700 அடி அகலம் உள்ளதாக கூறு கின்றனர்.

இன்னும் 2 ஆண்டுகளில் மழைக் காலத்தில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அதன்மூலம் சுற்று வட்டாரத்தில் உள்ள கிரா மங்களில் நிலத்தடி நீர் உயரும். கிணறுகளில் தண்ணீர் அதிகரிக் கும். அடுத்த 500 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சினையே சவுராஷ் டிரா பகுதியில் இருக்காது. எல்லா கால கட்டத்திலும் விவசாயிகள் வேளாண்மை செய்யலாம். இந்த பகுதி நந்தவனமாகி விடும் என்கிறார் ஜெராம்பாய் தெசியா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x