Last Updated : 02 Dec, 2014 07:34 PM

 

Published : 02 Dec 2014 07:34 PM
Last Updated : 02 Dec 2014 07:34 PM

ரோட்டக் சகோதரிகள் மற்றொரு நபரை விளாசிய வீடியோவால் பரபரப்பு

ஹரியாணா மாநிலம் ரோட்டக் நகரில் ஓடும் பஸ்ஸில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்களை பெல்டால் விளாசி தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த சகோதரிகள் இதற்கு முன்பு இதே காரணத்திற்காக பூங்கா ஒன்றில் இளைஞர் ஒருவரை விளாசிய வீடியோவும் வெளியாகியுள்ளது.

30 வினாடிகளுக்கான இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இன்று தொலைக்காட்சி சானல்களிலும் இது ஒளிபரப்பப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்று ‘விளாசல்’ சகோதரரிகளில் ஒருவரை தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் இருக்கும் என்றனர். அதாவது ரோட்டக் பேருந்து நிலையத்திலிருந்து தானும் தனது சகோதரியும் வந்த போது சில இளைஞர்கள் தங்களை கேலி செய்ததாகவும், பிற்பாடு பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஹூடா பார்க்கிற்குச் சென்ற போது பெஞ்சில் அமர்ந்திருந்த சில இளைஞர்கள் தங்களை கேலி செயததால் அவர்களை எதிர்த்துக் கேள்வி கேட்டுளனர். வாக்குவாதம் முற்ற சகோதரர்களில் ஒருவர் இளைஞர்களில் ஒருவரை சரமாரியாக வெளுத்துக்கட்டியதாகவும் உடனே அவர் ஓடி விட்டதாகவும் தெரிவித்தனர்.

ஏன் இதனை போலீஸில் தெரிவிக்கவில்லை என்று கேட்ட போது, இளைஞர்கள் சம்பவ இடத்திலிருந்து ஓடி விட்டதால் புகார் தெரிவிக்கவில்லை என்றனர்.

விளம்பரத்திற்காக இந்த வீடியோவை வெளியிட்டீர்களா என்று கேட்டதற்கு ‘இல்லை’ என்றனர்.

இந்த 2-வது வீடியோ பற்றி விசாரணை நடத்தப்படுவதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதற்கட்ட விசாரணையில், இந்த வீடியோ காட்சிகளை நேரடியாக தொலைக்காட்சி சானலுக்கு யாரோ ஒருவர் அனுப்பியுள்ளனர் என்று தெரியவந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

ரோட்டக் பேருந்து சம்பவத்தை மறுக்கும் குற்றம்சாட்டப்பட்டோரின் கிராமத்தினர்:

ரோட்டக் பேருந்தில் சகோதரிகளிடம் பெல்ட் விளாசல் வாங்கிய 3 பேரும் ஆசான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த கிராமத்தினர் அவர்களை காப்பாற்ற முடிவு எடுத்துள்ளனர். இந்த இளைஞர்கள் தவறாக இந்த புகாரில் சிக்கவைக்கப்பட்டுள்ளனர் என்கின்றனர் கிராமத்து பெரியவர்கள்.

உடல்நலம் குன்றிய பெண் ஒருவருக்கு இந்த இளைஞர்கள் டிக்கெட் எடுத்ததாகவும், அவருக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் சகோதரிகள் அமர்ந்ததாகவும் சகோதரிகளை இருக்கையை விட்டு எழுந்திருக்குமாறு கூறிய போது தகராறு எழுந்ததாகவும் இவர்கள் தங்கள் தரப்பு வாதத்தை எழுப்பியுள்ளனர்.

இவர்கள் தங்கள் தரப்பு வாதத்தை ரோட்டக்கில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x