Last Updated : 10 Nov, 2016 05:32 PM

 

Published : 10 Nov 2016 05:32 PM
Last Updated : 10 Nov 2016 05:32 PM

ரயில் டிக்கெட் கேன்சல் செய்தால் ரீஃபண்ட் ரொக்கத்தில் கிடையாது: ரயில்வே அறிவிப்பு

ரு.500, 1000 நடவடிக்கை காரணமாக மாற்று நோட்டுகள் இல்லாமையால் டிக்கெட் கேன்சல் செய்பவர்களுக்கு பணம் திருப்பி அளிப்பதில் ரயில்வேயிற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதால் ரொக்க ரீஃபண்ட் இல்லை என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. மாறாக டிக்கெட் டெபாசிட் ரசீதுகளை (TDR) வழங்குகிறது.

மேலும் டிக்கெட் கேன்சல் செய்ததன் மூலம் திரும்பத் தர வேண்டிய தொகை ரூ.10,000 என்றால் வாடிக்கையாளர்கள் பணத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்க முடிவெடுத்துள்ளது ரயில்வே நிர்வாகம், இதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும்.

ரூ.500, 1000 செல்லாது என்று அறிவித்தாலும் ரயில் நிலையங்களில் கொடுக்கலாம் என்று அரசு அறிவித்ததையடுத்து ரிசர்வேஷன் உள்ளிட்ட ரயில்வே கவுண்டர்களில் கூட்டம் நெரிசல் கண்டது. இதனையடுத்து மற்ற நோட்டுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. “எனவே டிக்கெட் கேன்சல் செய்பவர்களுக்கு டி.டி.ஆர். என்ற ரசீதுகளை வழங்கி வருகிறோம், ரீஃபண்ட் தொகை ரூ.10,000 மற்றும் அதற்கும் கூடுதலாக இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் சேர்க்கிறோம்” என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x