Published : 30 Jan 2017 08:44 AM
Last Updated : 30 Jan 2017 08:44 AM

ரயில் கட்டண சலுகைக்கு ஆதார் எண் கட்டாயம்?

ரயில் கட்டணத்தில் பயணிகள் சலுகை பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான அறிவிப்பு பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் வெளியாகும் என முக்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆதார் எண்ணை கட்டாய மாக்குவதன் மூலமாக ரயில் கட்டண சலுகை சரியான நபர்களுக்கு மட்டுமே போய்ச் சேர்வதை உறுதி செய்ய முடியும். ரயில் கட்டண சலுகை வழங்குவது தவறாக பயன்படுத்துவது தடுக்கப்படும் என அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

பயணிகளில் 50 வகையான பிரிவினருக்கு டிக்கெட் வாங்கும் போது ரயில் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. முதியோர், மாணவர்கள், ஆராய்ச்சிப் படிப்பு மாணவர் கள், ஆசிரியர்கள், டாக்டர்கள், நர்ஸ்கள், நோயாளிகள், விளையாட்டு வீரர்கள், வேலையில்லா இளைஞர்கள், அர்ஜுனா விருது பெற்றவர்கள் என பல்வேறு பிரிவினர்கள் சலுகை பெறுகிறார்கள்.

இப்போதைய நிலையில் முதல்கட்டமாக ரயில் கட்டண சலுகை பெற தகுதியான முதியோருக்கு மட்டும் சோதனை அடிப்படையில் ஆதார் எண் மூலமாக சலுகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

2015-16-ல் மட்டும் கட்டண சலுகையாக ரயில்வே நிர்வாகம் ரூ.1,600 கோடி வழங்கியுள்ளது. இதில் கணிசமான தொகை முதியோருக்கு போயுள்ளது.

புள்ளிவிவர கணக்குப்படி 100 கோடிக்கும் அதிகமாக ஆதார் அட்டை விநியோகிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x