Published : 23 Jul 2015 08:56 AM
Last Updated : 23 Jul 2015 08:56 AM

மருத்துவர்கள் வெள்ளைக் கோட் அணிய தடை விதிக்க வேண்டும்: நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்க ஆய்வில் யோசனை

பெங்களூரூவில் உள்ள யெனபோயா மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார் எட்மண்ட் பெர்னான்டஸ். இவர், நோய்த்தொற்று குறித்து ஆய்வு செய்து, அதன் முடிவுகளை பிஎம்ஜே எனும் மருத்துவ ஆய்விதழில் வெளியிட்டுள்ளார்.

அந்த ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு ஏற்படும் தொற்றுகள் குறித்து அவ்வப்போது ஒவ்வொரு மருத்துவமனையும் சோதனை நடத்த வேண்டும். ஆனால் இது சாத்தியமில்லாத ஒன்று.

எனினும், நோய்த்தொற்று ஏற்படாதவாறு தடுக்க சுலபமான வழி ஒன்று உள்ளது. மருத்துவமனைகளில் மருத்துவர்கள் அணியும் வெள்ளைக் கோட்டுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்பதே அது.

19ம் நூற்றாண்டில் இருந்து மருத்துவர்கள் வெள்ளைக் கோட்டு அணிந்து வந்தாலும், சமீபத்தில், அதில் கிருமிகள் படிந்து அதனால் மருத்துவர்கள் பரிசோதிக்கும் நோயாளிகளுக்குப் புதிதாக நோய்த் தொற்றுகள் ஏற்படுகின்றன என்று சமீபத்தில் தெரிய வந்துள்ளது. எனவே வெள்ளைக் கோட்டுக்கு தடை விதிக்கலாம்.

மேலும் இந்தியா போன்ற தேசத்தில் பல மருத்துவமனைகளில் மருத்துவர்கள் உடை மாற்றுவதற்கான அறைகள் இருப்பதில்லை. காரணம் இடப் பற்றாக்குறை. எனவே பல மருத்துவர்கள், மருத்துவமனைக்கு வெளியேயும் வெள்ளைக் கோட்டுகள் அணிகின்றனர். இன்னும் சிலர் அதனை அணிந்து கொண்டு ஷாப்பிங் மால்களுக்குக் கூட செல்கின்றனர்.

மேலும், அவை தினந்தோறும் சலவை செய்யப்படுவதில்லை. இந்தக் காரணங்களால் நோய்த் தொற்று ஏற்படுத்தும் கிருமிகள் வெள்ளைக் கோட்டுகளில் படிந்துவிடுகின்றன.

2007ம் ஆண்டு இத்தகைய வெள்ளைக் கோட்டுகளை அணிய இங்கிலாந்து தடை செய்தது. வெள் ளைக் கோட்டு என்பது ஓர் அடை யாளம் மட்டுமே. அதுவே உங்க ளுக்கு சிறந்த மருத்துவர் என்ற பெயரை பெற்றுத் தந்து விடாது.

மாறாக, ஒவ்வொரு மருத்துவ மனையும் தங்களிடம் பணியாற்றும் ஒவ்வொரு மருத்துவருக்கும் மக்களின் கண்களுக்குத் தெளி வாகத் தெரிகிறபடி, பெயர் அட்டை களை வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x